பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலையில் இலட்சியமும் வீரனும்

இலட்சியத்தால் வழிகாட்டப்பட்டுச் செயல்படும் விரர்களைக் கலை படைத்துள்ளது. மக்களது சமூக உணர்வென்னும் நாடித் துடிப்பை உணர்ந்து சமூகப் பொறுப்போடு இலக்கியம் படைக்கும் படைப்பாளி காலத்தின் லட்சியத்தையும் காலத்தின் நடைமுறையையும் இணைக்கிறான். சமூக வரலாற்றின் நிகழ்காலத்தையும் அதன் வருங்காலத்தையும் இணைக்கும் இலட்சிய வீரர்கள் கலைப்படைப்பாக உருவாக்கப்படுகிறார்கள்.

இலட்சியம் சமூக யதார்த்தத்திலிருந்து தோன்றுகிறது. சங்க கால இலட்சியங்கள் வள்ளுவர் காலத்தில் மறைந்து போயின. வள்ளுவர் கால இலட்சியங்கள் கம்பன் காலத்தில் மறைந்த போயின. கம்பன் காலத்து இலட்சியங்கள் தற்காலத்தில் மறைந்து போய்விட்டன. இலட்சியங்கள் என்றைக்கும் நிலைத்து மாறாமல் இருக்கக்கூடியவை அல்ல; அவை நிறை வேற்றப்படும்பொழுது மனிதனுக்குத் திருப்தி தராமல் போய் அவற்றைவிடச் சிறந்த இலட்சியங்களை அவன் வகுத்துக் கொள்ளுகிறான்.

இலட்சியங்கள் ஒரு வரலாற்றுக் காலத்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் அடிப்படையான மதிப்புகளும் விரும்பத்தக்க அம்சங்களும் ஒன்றுகூடி இலட்சியங்களாக உருவாகின்றன.

"மனித ஒழுக்கத்தின் சிறந்த கூறுகளே இலட்சியங்கள்" என்று லெனின் எழுதினார்.

மனிதனுக்கு இலட்சியம் தேவை. ஆனால் அது மனித இலட்சியமாக இருக்கவேண்டும். மனிதாதீதமான (Super natural) இலட்சியமாக இருக்கக்கூடாது

என்று கூறினார்.

சோவியத் நாவல்களில் பாசிச எதிர்ப்புப் போர்க் காலத்திலும் சோஷலிச நிர்மானக் காலத்திலும் படைக்கப்பட்ட இலட்சிய வீரர்கள், சாதாரண மனிதர்களே. சோவியத் மக்களின் நடைமுறை ஒழுக்கங்களிலிருந்து இலட்சிய வீரர்கள் படைக்கப்பட்டார்கள். யூரி ககாரின் அசாதாரணப் பிறவி யன்று. சாதாரண சோவியத் குடிமகன்தான். சோவியத் மக்களின் இலட்சியங்களைத் தனது இலட்சியமாகக் கொண்டு,