பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நா. வானமாமலை

எனவே, 'யதார்த்தத்தின் பிரதிபலிப்பு'தான் கலையின் பிரதான இயல்பாகும். அறிவியலில் யதார்த்தம் பிரதிபலிப்பதும் அழகியலில் யதார்த்தம் பிரதிபலிப்பதும் ஒற்றுமையான நிகழ்ச்சிகள்.

இவ்விரு திகழ்ச்சிகளின் வேறுபாடுகளை முதலாளித்துவ ஆசிரியர்கள் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அறிவியலில் கருத்தும், அழகியலில் படிமமும் பெரிதும் வேறுபட்டு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். கருத்து சூட்சுமமானது, படிமம் ஸ்தூலமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இது பொருந்தாத வாதம். கருத்தைப் போலவேதான் படிமமும் புறவய உண்மையினின்று வடித்தெடுக்கப்படுகிறது. புறவய யதார்த்தின் அச்சுநகலாகப் படிமம் இராது. அதன் சில அம்சங்களை மிகைப்படுத்தி அழகியல் படிமம் உருவாக்கப்படும். புறவய உண்மையின் அச்சு நகலாகக் கலைப் படிமத்தை உருவாக்க முயலும் நடப்பியல்வாதி (Naturalist) கலைத்துறையில் எதனையும் படைக்க இயலாது. கலைப்போலிகளைத் தான் படைப்பான். படிமம், கருத்து ஆகிய இரண்டிற்குமே ஸ்தூலத் தன்மை வெவ்வேறு அளவில் உண்டு. முற்றிலும் சூட்சுமமான கருத்து என்றோ, முற்றிலும் ஸ்தூலமான படிமம் என்றோ எதுவும் கிடையாது. எனவே இந்த வேறுபாடுகள் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. கருத்தோடு ஒப்பிடும்பொழுது படிமம் சிறிது அதிகமான ஸ்தூலத் தன்மைகொண்டது. படிமம் அவ்வாறு சிறிது அதிகமாக ஸ்தூலத் தன்மை பெற்றிருப்பதற்குக் காரணம் புறவய உண்மையிலிருந்து சில கூறுகளைத் தேர்ந்தெடுக்கிற நோக்குகளும் முறைகளுமே.

ஒரு படிமத்தை உருவாக்குவதற்குப் புலனுணர்வாகத் தோன்றுகிற கூறுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பொருளின் கட்புலனாகும் அல்லது செவிப் புலனாகும் இயல்புகளைத் தேர்ந்தெடுத்து இணைத்தால், படிமத்தில் ஸ்தூலத் தன்மை மிகுதியாக அமையும். அதாவது அப்போது, கருத்தை விட ஸ்தூலமாக நமது உள்ளத்தில் ஒரு பிரதிபலிப்புத் தோன்றும்.

எடுத்துக்காட்டாக இராமாயணத்தில் தாடகை என்னும் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

மிக்க கொடுமை, மிகப் பெரிய ஆகிருதி, மிகப் பெரிய தீமை என்ற இயல்புகளுடைய படிமம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வியல்புகள் சூட்சுமமானவை.

கொடுமையைக் காட்டச் சூழ்நிலை முழுவதும் பாலை நிலமாகக் காட்டப்படுகிறது. இங்கு வாழ்ந்த உயிர்களைச் சுட்-