பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நா. வானமாமலை

களின் தேர்வாலும், அவற்றின் இணைப்பாலும் அவை நம் அழகுணர்வில் ஸ்தூலமாகின்றன.

மில்டனின் சாத்தான்
கம்பனின் இராவணன்
ஹோமரின் நூற்றுக்கணக்கான வீரர்கள்
பாரதத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள்

ஆகியோர் தனித்த இயல்புகளோடு ஸ்தூலமான மனிதர்களாகவே நமது உள்ளத்தில் படுகிறார்கள்.

கலைப் படிமத்தின் வேறோர் தன்மை அது; பலவிதமாகப் பொருள் கொள்ள இடம் அளிக்கும். எப்பொருள் கொண்டாலும் கலைப் படிமம் அழகுணர்வில் பதிந்து நிற்கும். டால்ஸ்சடாயின் அன்னாகரீனா பலவித இலக்கிய விவாதங்களுக்கும் பொருளாகியிருக்கிறாள். ஒரு சோகக் கதாநாயகியாக உலக இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அவளை நேசிப்போரும் உள்ளனர், வெறுப்போரும் உள்ளனர். ஆயினும் அவள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில், குறிப்பிட்ட சமூக வர்க்கத்தின் உள்ளப் பாங்கினை எதிர்த்து நின்று தோற்றுப் போகும் கதாபாத்திரமாக உருவம் பெற்றுள்ளாள்.

ஜெயகாந்தனின் பாத்திரங்களனைவரும் வாழ்க்கையின் சாதாரணப் போக்கில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரங்கள். இவ்வாறுதான் எல்லா ரியலிச ஆசிரியர்களின் கதாபாத்திரங்களும் இருக்கும். முன்னரே கூறியதுபோல் வாழ்க்கையின் அச்சு நகலாகக் கலைப் படைப்புப் பாத்திரங்கள் இருக்க மாட்டா. இவற்றின் இயல்புத் தொகைக்கேற்ற இயக்கப் போக்கைச் சமூக உறவுகளில் அவை மேற்கொள்ளும்.

வாசகனது மனப்போக்கு, அவனது மனப்போக்கை உருவாக்கும் தத்துவக் கண்ணோட்டம், வாழ்க்கை மதிப்புகள் முதலியவற்றைப் பொறுத்துத்தான், கலைப்படிமங்களை அவன் வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளுகிறான்.

புகைப்படமெடுப்பவன் வாழ்க்கையின் சில அம்சங்களைக் காட்சியாகப் படம் எடுக்கிறான். அதனைப் புலக்காட்சியாகத் தருகிறான். இது கலைப் படிமம் அன்று. கலைப் படிமம் என்பது புறவய உலகத்தின் (மனித) அகவயப் பிரதிபலிப்பு.

கலைப் படிமத்தில் இயல்பான சூழலில் உண்மையான பொருள்களே காட்டப்படலாம். ஆனால் அவற்றைப் போன்ற பொருள்களிலிருந்து அது தனித்திருக்கிறது. அதாவது தனித்துவம் கலைப் படைப்பின் ஓர் இயல்பு. இப்பொருளில் ஒரு வர்க்கத்தின் ஆர்வங்கள், குறிக்கோள்கள், உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கும்; அல்லது அப்பொருள்களும் சூழலும், ஒரு