பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

49

குறிப்பிட்ட வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனுடைய பார்வையில் இருந்து காட்டப்படும். புகைப்படம் எடுப்பவன் தன்னைக் கவருகிற பொருள்களைப் புகைப்பட மாக்குகிறான். எதனைப் படம் எடுப்பது என்பதைத் தீர்மானிக்க அவனுக்குச் சிறிதளவு மனித உணர்ச்சி பயன்படுகிறது. அதற்கு மேல் கலைப்படைப்புச் செயலில் மனித உணர்விற்கு இடம் இல்லை. புகைப்படக் கருவி ஓர் இயக்க நிலையிலுள்ள பொருளையே படம் பிடிக்கின்றது. அதனைக் கலையுணர்வால் மாற்றுவதில்லை.

உண்மையான ரியலிசப் படிமம் வாழ்க்கையின் மிகக் சிக்கலான நிலைமையைச் சித்தரிக்கிறது. வாழ்க்கையின் ஓர் அம்சத்தை, மேம்போக்காகக் காணப்படுவதைத் தேர்ந்தெடுத்து, அதனை வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் காட்டுகிறது. அதுவே வாழ்க்கையின் அடிப்படை என்பதைத் தற்காலத்து மக்கள் உணராமல் இருக்கலாம். வாழ்க்கையின் மேம்போக்கான ஒரு கூறு கலையின் மேம்போக்கான கூறாக இராது.

ரியலிசப் படிமம் பன்முகத் தோற்றம் உடையது, உதாரணமாக மோலியருடைய கஞ்சன் கையிறுக்கம் உடையவன் மட்டுமே. அவன் தனிக்குணமாக கஞ்சத்தனம் காட்டப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் ஷைலக்கும் கஞ்சத்தனம் உடையவனே. ஆனால் அவனுடைய இந்த இயல்பு எப்படித் தோன்றியது என்பது நாடகத்தில் காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களது கொடுமைகளால் யூதர்கள் சேரிகளில் ஒதுக்கப்பட்டதாகவும், தங்கள் பண பலத்தால் தங்களை ஒடுக்கியவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற உணர்வு ஷைலக்குக்கு வந்ததாகவும் ஷேக்ஸ்பியர், ஷைலக் வாயிலாகவே கூறுகிறார். ஷைலக்கின் பேச்சு நியாயமற்ற முறையில் அடக்கப்பட்டவர்களுடைய கூற்று. மத்திய காலச் சமூகத்தின் மதக் குரோதம், சமூக ஏற்றத்தாழ்வுகள் முதலியன, அச்சமுதாயத்தைப் பழி வாங்கவேண்டும் என்ற உணர்வை ஷைலக் மனத்தில் ஏற்படுத்தின. தங்கள் தாழ்வுக்குக் கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று ஷைலக் நினைத்ததால்தான், ஒரு கிறிஸ்தவன் தன் மகளை மணக்க அனுமதி மறுத்ததோடு அவளைத் தன் மகளல்ல. என்று கூறவும் செய்தான். அவள் தன் பணத்தோடு ஓடிப் போய்விட்டாள் என்றறிந்ததும், அவள் அந்த நகைகளோடு சவப்பெட்டியில் கிடப்பாளாக என்று சாபம் இடுகிறான்.

ஷைலக், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு, கொடுமைக்குள்ளான ஓர் இனத்தின் பிரதிநிதி...அவனது படிமத்தில் சமூக

32/4