பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நா. வானமாமலை

அமெரிக்கர்களுக்கு உணவையும் சக்தியையும் அளிக்க உழைக்கும் தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையைப் பிழிந்து கொடுத்துத் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு, சுரங்க முதலாளிக்கும் எண்ணெய் முதலாளிக்கும் இறைச்சித் தொழில் முதலாளிக்கும் டாலர் ஆறுகள் பெருகச் செய்கிறார்கள். இதை அவர்கள் படிப்படியாக உணர்கின்றபோது போராட்டங்கள் தோன்றுகின்றன. போராட்டங்களை அடக்க ஒருபுறம் சட்டத்தின் இரும்புக் கரமும் மறுபுறம் பணம் என்ற மென்மையான கரமும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜூர்கிஸ் என்ற தொழிலாளி ஹாலந்திலிருந்து வந்தவன். தெருவெல்லாம் சிதறிக் கிடக்கும் தங்கத்தை அள்ளிக் கொண்டு தன் நாட்டுக்குப் போய், செல்வந்தனாகத் தான் விரும்புகிற காதலியை மணந்துகொண்டு வாழவேண்டுமென்ற ஆசையோடு அமெரிக்காவுக்கு வந்தவன், பாஸ்டன் நகரில் இறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். இயந்திரமயமாக்கப்பட்ட கொலைத் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் தொழிற்சாலையில் தங்கத்தைக் காணவில்லை. மாடுகளை இயந்திர வாள்கள் வெட்டுவதையும், இரத்தம் பீறிட்டு வருவதையும் ஓர் ஓரத்தில் உயிருள்ள மாடுகள் நிற்பதையும் மற்றோர் புறம், தகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி வருவதையும் காண்கிறான். அவன் பணியிடத்தில் கானும் காட்சிகள் அவனது மனித உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்கின்றன. குடிக்க ஆரம்பிக்கிறான்; பணம் தேவைப்படுகிறது. இத்தகைய உடல் பலமுள்ள இளம் தொழிலாளர்களை அடிப்படையாக அமைக்கும் நிருவாகம் இவனுக்குப் பணம் கொடுத்தே இவனைப் படுகுழியில் ஆழ்த்துகிறது.

தேர்தலில் அடியாளாக ஒரு முதலாளித்துவக் கட்சிக்குப் பணிபுரிகிறான். இதில் பல அனுபவங்கள் பெறுகிறான். தேர்தலுக்குப் பின், முதலாளித்துவக் கட்சிக்கு இவன் தேவையில்லை. கைவிட்டு விடுகிறார்கள். கருங்காலியாகிவிட்ட ஜூர்க்ளை தொழிலாளிகள் வெறுக்கிறார்கள்.

இருளில் ஒளிபோல ஒரு சோஷலிஸ்டு யுவதி அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். சோஷலிஸ்டுக் கூட்டம் ஒன்றிற்குச் செல்லுகிறான். பேச்சாளரின் உணர்ச்சிமிக்க பேச்சைக் கேட்கிறான். சோஷலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் ஈடுபாடும் உண்டாகிறது. ஆனால் இக்கதாபாத்திரம் திடீர் மாற்றம் பெறுகிறது. ஜூர்கிளின் கருத்துப் புரட்சிக்குத் தேவையான தயாரிப்பு இல்லை. ஒரு புதிய மட்டத்தில் சிந்திக்கத் தொடங்குகிற உணர்ச்சி மாற்றத்தைச் சரியாகத் தயார்படுத்தி ஆசிரியர் சித்திரிக்கவில்லை. புதிய