பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நா. வானமாமலை

படைக்கவேண்டும் என்று வாழ்நாளெல்லாவற்றையும் வீணாக்குகிற கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனத்தைக் குடைந்து குடைந்து பார்க்கிறார்கள். பின்னரே தாங்களே ஒரிஜனலாக ஒரு படைப்பைப் படைத்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இது வெற்றுப் பேச்சு. இது நடவாததொன்று. புற உலகு ஒவ்வொரு வினாடியும் தன் நிகழ்ச்சிப்போக்கின் தடங்களைக் கலைஞன் உள்ளத்தில் பதிக்கிறது. அதை அவர்கள் உணர்வதில்லை.

கீதே கவிஞர் மட்டுமல்ல. கலை இலக்கிய வரலாற்றையும் அறிந்தவர். பல கலைத்துறைகளிலும் அனுபவம் பெற்றவர்.

சோவியத் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் லியோனிட் லியோனோவ். அவர் ’எழுத்து’ என்னும் பொருள் பற்றி எழுத்தாளர்களிடையே உரையாடினார். அவர் கூறினார்.

படைப்பு மேதை என்னும் காற்று எல்லா எழுத்தாளர்கள் மீதும் வீசுகிறது. சரியாக அமைக்கப்பட்ட பாய்கள் உள்ள படகுகள் அக்காற்றில் கரை சேருகின்றன. எல்லா இலக்கியமுமே தனியான கலைஞன், உலக இலக்கியத்தின் முழுமையான மரபு ஆகிய இரண்டின் பரஸ்பரத் தாக்கத் தின் விளைவாகத் தோன்றியதாகும்.

இதனை ஓர் இணைகரத்தின் மூலை விட்டத்திற்கு லியோனிட் லியோனோவ் ஒப்பிடுகிறார்.

1, 2, 3, 4 உலக கலை மரபு; 5 தனிக் கலைஞன்

படம் 2