பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரபும் மாற்றமும்

61


வாழ்க்கையென்பது மிகவும் சிக்கலான மனித உறவுகள். முரண்பட்ட மனித உறவுகளைக் கலைஞன் சமூக வளர்ச்சியாகக் காண்கிறான்.

கலை வரலாறு என்பது, மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய இவையிரண்டும் ஒருமையாக மனிதன் மனத்தில் தோற்றுவித்த அகவயப் படிமங்களின் தொகுப்பேயாகும்.

ஒரு தற்காலக் கலைஞன், வாழ்க்கையோடு கொண்டுள்ள தொடர்பானது, வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு அவன் கொண்டுள்ள தொடர்பு மட்டுமல்ல. அவற்றின் படிமப் பிரதிபலிப்புகளான கலைப் பொருள்களோடும், அவற்றின் உட்பொருளான அகவயப் பண்பாட்டோடும் கொண்டுள்ள தொடர்புமாகும்.

எனவே ஒரு கலைஞன் வாழ்க்கையை எப்படிக் கலைவடிவத்தில் பிரதிபலிப்பது என்று சிந்திக்கும்பொழுது, தனக்கு முன் வாழ்ந்த கலைஞர்கள் அதனை எப்படிப் பிரதிபலித்துள்ளார்கள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

ஜெர்மானியக் கவிஞர் கீதே சொல்லுகிறார்:

நாம் நம்மை யாரென்று எண்ணிக்கொண்டாலும், நாம் கூட்டுயிர்கள் என்பதை மறுக்க முடியாது. தமது முன்னோர்களிடம் நாம் கற்றுக் கொள்கிறோம். நம் காலத்தில் வாழ்பவர்களிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

கீழ்வரும் படத்தின் மூலம் இக்கருத்தை விளக்கலாம்.

X கலைஞன்

படம் 1

மேலும் கீதே சொல்லுகிறார்:

எந்த ஒரு கலை மேதையும் தன் அகத்தினுள்ளிருந்தே, கலையைப் படைக்க விரும்பினால் வெற்றி பெறமாட்டான். தானே முதலாவதாக ஒரு கலைப் பொருளைப்-