பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

68


கலை சமூகப் பணி புரியவேண்டாம்.

கலைஞனுக்கு எல்லையற்ற அகவயச் சுதந்திரம் உண்டு.

அழகியல் சுதந்திரம் ஒர் அராஜக நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

யதார்த்தத்தைத் திரிபுபடுத்தும் உரிமையை அவன் பயன் படுத்தவேண்டும்.

இந்த அழகியல் சாசனம் கலைத்துறையில் முழுக் குழப்பத்தை விளைவிக்கிறது. மரபு என்பதையே துடைத்தெறிகிறது. வாழ்க்கையென்னும் அடிப்படையோடு தொடர்பில்லாத பல மாடிக் கட்டிடமாக இருக்கிறது. என்றைக்காவது பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

நவீனத்துவம், அதன் இலக்கியத் தந்தையர்களான திரி மூர்த்திகளிடமிருந்து மட்டும் பிறந்ததன்று. எந்தத் தத்துவத்திலிருந்தும் நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் நவீனத்துவவாதிகள், சில தத்துவக் குருமார்களைப் பின்பற்றுகிறார்கள். மிகப் பிற்போக்கான தத்துவக் கண்ணோட்டமுடைய ஷோப்பனேர், நீட்ஷே, கெர்க்கே காட் ஆகியோரது தத்துவங்களின் செல்வாக்குக்குட்பட்டு இவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். இலக்கியப் படைப்பு சர்வ சுதந்திரமானது என்று வெளிப்படையாகக் கூறும் இவர்கள், மனித நேசமற்ற முதலாளித்துவத் தத்துவங்களைப் பின்பற்றுகிறார்கள்.

சோஷலிஸ்டு ரியலிசம் வரலாற்றில் தோன்றியுள்ள சிறந்த கலை மரபுகளைத் தன்வயப்படுத்தி அதன் போஷணையில் வளர்ந்து மாறுகிறது என்று பொதுவாகச் சொல்லுகிறோம். இதைச் சிறிது குறிப்பிட்டு, எவ்வகையான மரபுகளைச் சோஷலிஸ்டு ரியலிசம் கிரகித்துக் கொண்டு வளர்ச்சியடைகிறது என்று காண்போம். கலை உலகில் மூன்று வகையான கலை மரபுகள் உள்ளன.

1 உலக இலக்கிய மரபு
2 தேசிய மரபு

3 சோஷலிஸ்டு ரியலிச மரபு.

உலக இலக்கிய மரபு

மார்க்சீயம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில், மார்க்சீயம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த அறிவுக் கூர்மையுடைய மூளைகள் எழுப்பியுள்ள வினாக்களுக் கெல்லாம் விடை கூறுவது மார்க்சீயம்

என்று லெனின் எழுதினார்.

32/6