பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நா. வானமாமலை

தின் சார்பாளராயிருந்தும், எல்லா வகையான இலக்கியப் போக்குகளின் தன்மைகளையும் உணர்ந்திருந்தார்.

1919இல் 'உலக இலக்கியம்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட வேண்டிய நூல்களுக்கு ஒரு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை லெனின், மார்க்சிம் கார்க்கிக்கு அளித்தார். சோவியத் நாட்டுக்குச் சோதனை மிக்க காலம் அது. புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள்கூட முடியவில்லை. பிற்போக்குச் சக்திகளின் வலிமை முற்றிலும் அழிக்கப்படவில்லை. முதலாளித்துவ இலக்கியப் படைப்பாளிகளும் நடுத்தர வர்க்க எழுத்தாளர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

அச்சமயம் வெளியிட வேண்டிய நூல்களின் பட்டியலைக் கார்க்கி தயாரித்தார். அப்போது, மார்க்ஸ் - எங்கல்சின் உலக இலக்கிய மரபு பற்றிய கொள்கையைப் பின்பற்றி, கார்க்கி, பண்டைக் காலம், இடைக் காலம், மறுமலர்ச்சிக் காலம், அறிவு வளர்ச்சிக் காலம், 19-20 ஆம் நூற்றாண்டு இலக்கியம் ஆகிய வரலாற்றுக் காலங்களில் வெளியான சிறந்த படைப்புகளைச் சோவியத் மக்களுக்கு அறிமுகப்படுத்த, வெளியிட வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தார். இத்திட்டம் குறித்து கார்க்கி எழுதினார்:

இந்நூல்கள் அனைத்தும் சேர்ந்து வரலாற்றுக் கால முழுவதிலும் படைக்கப்பட்ட இலக்கியச் செல்வங்களின் முழுமையான தொகுப்பு ஆகும். இந்நூல்கள், ஒவ்வொரு வகையான இலக்கியப் போக்கின் தோற்றுவாய், வளர்ச்சி, தேய்வு, அழிவு ஆகிய கட்டங்களையும் அவற்றிற்குரிய காரணங்களையும் அறிந்து கொள்ள வாசகனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும். கவிதை, உரைநடை ஆகிய இரு உருவங்களின் படிப்படியான வளர்ச்சிக்குப் பல நாடுகளில் படைக்கப்பட்ட அவ்வந்நாட்டு இலக்கியங்கள் எவ்வாறு பங்காற்றின, உலக இலக்கியங்களின் மொத்தமான மரபுகள் என்ன, வால்டேரிலிருந்து அனடோல் பிரான்ஸ்வரை, ரிக்கர்ட் ஸ்னிலிருந்து ஹெச். ஜி. வெல்ஸ்வரை, கீதேரிலிருந்து ஹாப்ட்மன் வரை இலக்கிய ஆறு எவ்வாறு வளைந்து வளைந்து சென்று மக்கள் மனம் என்னும் பண்பாட்டு நிலத்தை வளம்பெறச் செய்திருக்கிறதென்று இத்திட்டத்தில் வெளியிடப்படும் நூல்கள் தெளிவாக்கும்.

சோஷலிச ரியலிசச் சார்புவாதிகள் உலக இலக்கிய மரபின் மீது கொண்டுள்ள கண்ணோட்டம் இதுதான்.

மார்க்ஸ்-எங்கல்சின் உலக இலக்கிய ஆய்வுகளையும் கார்க்கியின் மார்க்சீயக் கொள்கைகளை அடியொற்றிய வெளி-