பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

77


புரட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல தேசிய இன மொழிகளுக்கு எழுத்துருவம் இல்லாதிருந்தது. சோவியத் மொழி இயலார் அவற்றுக்கு எழுத்துருவம் அமைத்துக் கொடுத்தனர். வாய்மொழி இலக்கியம், எழுத்துருவம் பெற்றது. கல்வி பரவியதால், இலக்கியப் படைப்புக்களைப் படிப்பவர்கள் அதிகரித்தனர். பல மொழிகளில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது. ஏற்கெனவே வளர்ச்சி பெற்றிருந்த ரஷ்ய இலக்கியம் பிற தேசிய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்குக் கை கொடுத்து உதவியது.

சோவியத் ரஷ்யாவின் இலக்கியத்திற்கு வழிகாட்டிய அரசியல் கொள்கைகளின் தொடக்கநிலை டால்ஸ்டாய், செர்னிஷெவ்ஸ்கி, பெலின்ஸ்கி ஆகிய சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது.

டால்ஸ்டாயின் 'கலையைப்பற்றி' என்ற நூல், ரியலிசப் படைப்பின் அழகியல் தத்துவ அடிப்படைகளை அமைத்தது. அதன் கொள்கைகளில் மிகப்பல இன்று சோஷலிஸ்டு ரியலிச எழுத்தாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவருடைய தத்துவக் கருத்துக்கள் பலவற்றில் சோவியத் எழுத்தாளர்கள் மாறுபட்டிருக்கிறார்கள். ஆனால், கலைப் படைப்பு முறை, அழகியல் நோக்கு ஆகியவற்றில் டால்ஸ்டாயின் கொள்கைகள் சோவியத் இலக்கியத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

அழகியல் சிந்தனையிலும் கலைப் படைப்பாளி என்ற தன்மையிலும், டால்ஸ்டாய் கலை இலக்கியங்களின் இதயத் துடிப்பையே அறிந்திருந்தார். அவருடைய கண்டுபிடிப்புகள் ரியலிச இலக்கியத்திற்கும் சோஷலிஸ்டு ரியலிச இலக்கியத்திற்கும் பொதுச் சொத்தாகியுள்ளன.

கலைஞன் என்ன சொல்லுகிறான், எப்படிச் சொல்லுகிறான், எவ்வளவு உணர்வுபூர்வமாகச் சொல்லுகிறான். என்பதைப் பொறுத்து ஒரு கலைப் படைப்பு நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கிறது

என்று டால்ஸ்டாய் 'கலையைப்பற்றி' என்ற நூலில் எழுதினார். மேலும் அவர் அந்நூலிலேயே கூறுகிறார்:

தனக்கு முன் யாரும் கண்டிராத, அறிந்திராத, உணர்ந்திராத ஒன்றைக் கண்டும், அறிந்தும், உணர்ந்தும் ஒரு கலைஞன் சொல்லுவானானால், அதுவே உண்மையான கலையாகும்.

இச்சொற்றொடரை நவீனத்துவவாதிகள் சொல்லுக்குச் சொல் தலையாட்டி வரவேற்பார்கள். 'டால்ஸ்டாய் நாங்கள்