பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நா. வானமாமலை


என்ற வேறுபாடு உள்ளது. இவர்களுக்கிடையே நடைபெறும் போராட்டமே, ஒரு நாட்டில் கலைகள் வளருகின்றனவா, போலிப் படைப்புகள் வளருகின்றனவா என்பதைத் தீர்மானிக்கிறது. தொடர்ந்து, முந்திய மரபை, புதிய நிலைமைகளில் வளர்த்துச் செல்பவர்கள் உள்ள நாட்டில் தான் கலை செழிப்பாக வளர்ந்து மணம் பரப்பும் என்று மார்ட் புரூப் கூறினார்.
"எல்லா வகையான நல்ல கவிஞர்களும் தேவை” என்ன மாயகாவ்ஸ்கி அறைகூவல் விடுத்தார்.
நமது கலை உருவங்களில் தனித்துவம் இருக்கவேண்டும். அவற்றின் உள்ளடக்கங்களில் சோஷலிசத் தன்மை, லெனினியக் கண்ணோட்டம் நிறைந்திருக்கவேண்டும் எனக் கார்க்கி கூறினார்.
இந்தக் கொள்கையைத் திரித்துக் கூறி நவீனத்துவவாதிகள் எதிர்க்கிறார்கள். அவர்கள் நம்மை அடித்து நொறுக்கிவிட்ட தாக எண்ணிக் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளை நம்மை நோக்கி வீசுகிறார்கள்.
"கலைஞனது படைப்புப் புதுமையையும் அவன் மக்களுக்குப் பொறுப்பாக எழுத வேண்டும் என்ற கொள்கையையும் நீங்கள் எப்படிப் பொருத்தமாகக் கருதுகிறீர்கள்?
சோஷலிஸ்டுக் குறிக்கோளை மனத்தில் பதித்துக்கொண்டு எழுத்தாளன் எப்படிச் சுதந்திரமாக எழுத முடியும்?
சோவியத் இலக்கியத்தில், பல தேசிய இனப் பிரிவுகளின் வளர்ச்சியே இக்கேள்விகளுக்குப் பதிலாக அமையும்.
ஆம்! கலைஞனது படைப்புப் புதுமை, கலைஞன் மக்களுக்குப் பொறுப்பாக எழுதவேண்டும் என்ற இவ்விரண்டு கோட்பாடுகளையும் இணைக்க முடியும். இணைத்ததாலேயே மிகச் சிறந்த இலக்கிய்ப் படைப்புக்களைச் சிறு தேசிய இனங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் படைத்துள்ளார்கள்.
ஓர் எடுத்துக்காட்டுத் தருவோம். 'அலிடெட் மலைக்குப் போகிறான்' என்று இரண்டு பகுதிகளில் பனிக்காட்டுப் பகுதியான ஆர்க்டிக் வட்டத்தில் வாழ்கின்ற'சுக்சி' என்ற மக் களைப் பற்றிய ஒரு நாவல்.
தொடக்க நிலை நாகரிகக் கட்டத்தில் வாழ்ந்த மக்கள், உணவுக்கு 'ஸில்' என்ற விலங்கையும் கடற்பாசியையும் தேடி அலைந்தவர்கள், சிறிது கடற்கரையில் இருந்து விலகிக் காட்டுப்பகுதிகளில் 'ஒய்ன் பீர்' என்ற காட்டு மான்களைப் பிடித்து வளர்த்தார்கள்.