பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மரபும் மாற்றமும்

81


சமூக வாழ்க்கையில் பெண் அடிமைத்தனம் மிகுந்திருந்தது. சமூகத் தலைவர்கள் பல பெண்களை மணம் செய்துகொண்டார்கள். வேட்டையாடவோ, மான்களை விலைக்கு வாங்கவோ, மயிர் அடர்த்தியாக இருக்கும் தோலை வாங்கவோ தங்கள் மனைவியரை ஈடு வைத்தார்கள். நண்பர் அல்லது அந்நியர் விருந்தினராக வந்தால் தங்கள் மனைவியரில் அவர்களுக்கு பிடித்தமானவரை, இரவில் அவர்களோடு தங்குவதற்கு அனுப்பும் வழக்கமும் இருந்தது.
உணவுத் தட்டுப்பாட்டினால் ஏழைகள் தங்கள் வீட்டில் ஐம்பது வயதுக்கு மேலான ஆண்-பெண்களை, ஒரு பெரும் விழா நடத்தி, கழுத்தில் துணியைக் கட்டித் தூக்குப் போட்டுக் கொன்று விடுவார்கள். இது சமூகத் தேவையாக இருந்ததால், கொல்லப்படுகின்றவர்கள், சுவர்க்கம் சேர்ந்து குடும்பத்தை வாழ்த்தி, மிகுந்த அளவில் ஸில் வேட்டை கிடைக்கச் செய் வார்கள் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
எந்த ஒரு செயலுக்கும் ஷாமன் என்ற மந்திரவாதியின் உத்தரவு கேட்டு, அதன்படி நடந்து வந்தார்கள்.
புரட்சி தோன்றியது. நான்கைந்து ஆண்டுகள், இவர்கள் வாழும் பகுதிகளுக்கு ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழிலா வார்கள் ஆகியோர் வேட்டைத் தொழிலுக்கான கருவிகளோடு வந்தார்கள். பள்ளிகள் தோன்றின. ஷாமன்கள் அறிவு பரவு வதை எதிர்த்து ஆசிரியர்களைக் கொலை செய்தார்கள். மருத்துவமனைக்குள் மக்களைப் போகவொட்டாமல் ஷாமன் தடுத்தான். மக்கள் உண்மைகளை அறிய முடியாமல் தடுக்கப்பட்டார்கள்.
இந்த மக்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றவும், அமமக்களின் விலங்குநிலை வாழ்க்கையை மனித வாழ்க்கையாக மாற்றவும் கம்யூனிஸ்டுகள் அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பலர், மக்களது அறியாமையால் கொல்லப்பட்டார்கள். தங்களுக்கு நன்மை செய்ய வந்தவர்களையே ஷாமனது துரண்டுதலால் துன்புறுத்தினார்கள்.
மிகவும் திறமையாக மக்களை ஏமாற்றி வந்த ஷாமன் களது சூழ்ச்சிகள் வெளிப்படுத்தப்பட்டன. பிறகு மக்களே ஷாமன்களைக் கொன்று விட்டார்கள். குழுத்தலைவர்களை யும் வேலை செய்யும்படி மக்களே கட்டாயப்படுத்தினார்கள்.
தங்கள் உழைப்பின் பயன் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் புதிய கம்யூனிஸ்டுப் புரட்சித் தூதர்கள் ஏற்படுத்தினார்கள். இவர்கள் வந்த எட்டு ஆண்டுகளில் ஒரு சுக்சி பெண் மருத்துவம் கற்கவும், ஒரு சுக்சி இளைஞன் அமைப்புப்