பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிலேயே எழுதும். நமது தமிழ் நாட்டுப் பத்திரிகை களைப் பற்றி வாசகர்களுக்குத் தெரியும். முதலாளித்துவத்தின் பொருளாதார அடிப் படைகள் நிலையில்லாமல் போகும் பொழுது, தொழி லாளி வர்க்கமும் உழைக்கும் வர்க்கங்களும் முத லாளிவர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிற போராட் டங்கள் வலுவடையும் பொழுது, முதலாளி வர்க்கம் பார்லிமெண்டின் உரிமைகளையும், மக்களின் உரிமைகளையும் ஒடுக்க முயலுகிறது. உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் தனது வர்க்க ஏதேச்சாதிகாரத்தை செயல்படுத்த முற்படுகிறது. இந்தப் போக்கு ஏகாதிபத்தியமாக முதலாளித் துவம் வளர்ச்சி பெற்ற பிறகு அதிகமாகிறது. ஏக போகங்கள் தமது நலன்களுக்கு பார்லிமெண்டின் உரிமைகளை உட்படுத்துகிறது. அரசியல் விழிப் படைந்த உழைக்கும் வர்க்கங்கன், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், முதலாளித்துவ ஏதேச்சாதிகாரத்தைத் தடுக்கவும் போராடுகின்றன. இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களின் பலத் தைப் பொறுத்து, பார்லிமெண்ட் மூலம் மக்களுக்கு இருக்கும் உரிமைகள் விரிவடைகின்றன; அல்லது சுருங்குகின்றன. ஜெர்மனி, இங்கிலாந்து பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளில் 1918 முதல் 1946 வரையுள்ள காலத்தில் மாதர்கள் வாக்குரிமை பெற்ருர்கள். வாக்தாளருக்கு சொத்து இருக்க வேண்டுமென்ற தகுதி நீக்கப்பட்டது, சமூக இன் ஷரேன்ஸ் முறை சட்டமாக்கப்பட்டது. போர்ாட் டங்களின்மூலம் முதலாளிகளின் விருப்பத்திற்கெதி ராக, மக்கள் பார்லிமெண்டைச் செயல்பட வைக்க முடியும் என்பது தெளிவாகிறது. ஆயினும் உண்மை யான அரசியல் அதிகாரம் பார்லிமெண்டின் கையில் இல்லை. அரசுதான் பார்லிமெண்டைவிட அதிகாரம் உடையதாக இருக்கிறது. மா. கொ-? 97