பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளுகிறது. எல்லா வர்க்கங்களையும், வர்க்கப் பிரிவினைகளையும் அது ஒழித்துவிடுகிறது. அரசை, (வர்க்க அடக்குமுறைக் கருவி என்ற நிலையில்) அரசென்ற நிலையில் ஒழித்து விடுகிறது. (lt abolishes state as state) ouff&& 639T3iå¿âiflait ¿£ நிலையில் இயங்கிவந்த சமுதாயத்திற்கு அரசு தேவை யாக இருந்தது. ஏனெனில் அரசு, ஒரு சுரண் டும் வர்க்கத்தின் அமைப்பாயிருந்து, உற்பத்தி உறவுகளே நிலைப்படுத்தி வந்தது. ஒரு உற்பத்தி அமைப்பில், சுரண்டப்படும் வர்க்கத்தை, ஒடுக்கி வைத்து உற்பத்தியின் புற நிலைமைகளைப் பாதுகாக்க அரசு கருவியாக இருந்தது. ஆயினும் அதுதான் சமு தாயம் முழுவதற்கும் அதிகாரபூர்வமான பிரதிநிதி யாக பார்வைக்கு காட்சியளிக்கிறது. ஏனெனில் ஆளும் வர்க்கமே ஒரு சமுதாயத்தின் பிரதிநிதி யாக அதிகார பூர்வமாக தோன்றுவதால், அதிகார அமைப்பே, சமுதாய முழுமைக்கும் பிரதிநிதியாகத் தோன்றுகிறது. பண்டைக் காலத்தில் அடிமை யுடைமைஅரசு, இடைக்காலத்தில் நிலப்பிரபுக்களது அரசு, நமது காலத்தில் முதலாளிகளது அரசு. அரசு, சமுதாய முழுவதற்கும் உண்மையான பிரதிநிதி யாக ஆகும் பொழுது, அதற்கு அவசியம் இல்லாமற். போய் விடுகிறது. ஒரு சமூக வர்க்கத்தையும் ஒடுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போகிற பொழுது, வர்க்க ஆட்சியும், உற்பத்தி அராஜ கத்தால் ஏற்படும் வாழ்க்கை போராட்டமும், அப் போராட்டத்தால் விளையும் நெருக்கடிகளும் அகற் றப்பட்ட பின்னர், ஒடுக்கி வைப்பதற்குரிய வர்க்கம் ஒன்றும் இல்லை. சமுதாய முழுவதற்கும் பிரதிநிதி யாக அது செய்கிற செயல், உற்பத்தி சாதனங்களை சமூகத்தின் பிரதிநிதியாக உடைமையாக்கிக் கொள்ளுவதுதான். இச்செயல்தான் அத சுயேச்சையான, கை டசிச் - செயல். - சமுத -.