பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களால் அரசு தலையிடுவதற்கு அவசியமில்லாமல் போகிறது. அதல்ை அரசு வாடி உதிர்ந்துபோகும். மனிதர்களின்மீது செலுத்தப்பட்ட ஆட்சி, ஒழிக்கப் பட்டு, பொருள்களை நிருவகிக்கும் நிருவாகமாக மாற்றப்பட்டு உற்பத்திச் செயல்முறையை ஒழுங்கு படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பாட்டாளி வர்க்க அரசு ஒழிக்கப் படுவதில்லை. அது தானகவே உதிர்ந்து போகிறது. "சுதந்திரமான மக்களின் அரசு' என்ற சொற்ருெடரின் பொருள் அதற்கு உண்டாகிறது. சிறிது காலத்துக்கு அது மக்கள் அர சாங்கமாகப் பயன்பட்டுவிட்டு முடிவாக விஞ் ஞான ரீதியாகவே செயலற்றதாக ஆகிவிடுகிறது, அது உதிர்ந்து போகிறது. அராஜக வாதிகள் கூறு வதுபோல அது ஒரேநாளில் ஒழிக்கப்படுவதில்லை." 'அரசு உதிர்ந்து போகும்' என்ற எங்கெல் வின் வாசகம், அரசு ஒழிக்கப்படும்' என்ற அரா ஜக வாதிகளின் கருத்துக்கு நேர் விரோதமாக உள்ளது. இதன் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளாமல், பல சோஷலிஸ்டுக் கட்சிகள், புரட்சி கரமான துள்ளல் மாறுதல்களும், சமுதாயப் புயல் களும் இல்லாமல், படிப்படி மாறுதல்களால் அரசு உதிர்ந்துவிடும் என்று பொருள் கொள்ளுகிரு.ர்கள். இவ்வாறு பொருள் கொள்ளுவது, புரட்சி என்பதன் பொருளை தெளிவற்றதாக்குவதாகவே முடியும். புரட்சியே தேவையில்லை என்ற முடிவுக்குக் கூட, இவ்வாறு பொருள் கொள்ளுவோர் வரக்கூடும். ஆனால் இவ்வாறு பொருள் கொள்ளுவது மார்க்சீயத்தை வலதுசாரிப் பக்கமாகப் புரட்டுவ தாகும். இந்தக் கருத்து, முதலாளிகளுக்கு அனுகூல மான கருத்தாகும். கொள்கையளவில், எங்கெல்ஸ் விவரமாகவும், தெளிவாகவும் விளக்கிய கருத்துக்கு நேர் முரணுனதாகும். அரசு உதிர்தல்' பற்றிய்

  1. 04