பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞான ரீதியான முடிவுகளை வளர்த்துச் செழு மைப்படுத்துவதை காணலாம். சோஷலிச அரசின் வடிவங்கள் கால வரிசைப்படி கூறுவதாளுல், உலகில் தோன்றிய முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு பாரிஸ் கம்யூன் ஆகும். பாரீஸ் கம்யூனின் தன்மையை ஆராய்ந்து, மார்க்ஸும், எங்கெல்ஸும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் இயல்பு களை விளக்கினர். 1 , பொது மக்களின் நேரடியான அரசியல் அமைப்புகள் அரசாங்க அதிகாரத்தில் இருந்தன. 2 , சட்ட நிர்மாணத்திற்கும், அரசாங்க அதிகாரத்திற்கும் ஒற்றுமையிருந்தது. 3. குடியரசு ஆட்சிமுறை, அரசாங்க அதிகாரத்தின் வடிவமாய் இருந்தது. 4. ஜனநாயக மத்தியத்துவம் அரசாங்க அமைப்பின் அடிப்படைக் கொள்கையாயிருந்தது. பாட்டாளி வர்க்க ஜனநாயக அ ம் சங்க ள் ப்ல அரசாங்க உறுப்புகளில் இருந்தன. தேர்தலால் எல்லா நியமனங்களும் நடந்தன. ஒரு சபைக்கு எல்லா அதிகாரிகளும் பொறுப்பாக இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத் துக்குப் பின் பதவியில் நீடிக்காமல் மாற்றப்படுவர். இந்த ஜனநாயக அம்சங்களை சோவியத் அரசில் மேலும் வளர்ச்சியுற்ற நிலையில் காணலாம். தொழி லாளிகளின் முன் முயற்சியால் படைக்கப்பட்ட பொது மக்கள் நிறுவனங்கள் சோவியத் அமைப்பு கள். 1905 புரட்சியின் போது அவை தோன்ற ஆரம் பித்தன. 1917-ல் அவை நாடு முழுவதும் பரந்த அளவில் தோன்றிவிட்டன. 1905-ல் அவை தொழி லாளர்களைக் கொண்ட நிறுவனங்களாக இருந்தன. அவை 1917-ல் தொழிலாளர், விவசாயிகள். ராணுவத்தினர் கொண்ட சோவியத் சபைகளாக பு:ஈ. கொ-8 if 3