பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயி வர்க்கத்தின் கூட்டுறவை அது நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலை கொண்டிருப்பதற்கு இக் கூட்டுறவு இன்றியமையாதது. அக்காரணத்தாலும் விவசாயிகள் முதலாளித்துவ வர்க்கத்தோடு சேர்ந்து விடக் கூடாது. இதற்காக சோஷலிஸ்டு நிர்மாணப் பனிகளில் விவசாய வர்க்கத்தை ஈடுபடுத்த வேண்டும். ஆட்சிப் பதவி இழந்த சுரண்டல் வர்க்கங்களை அடக்கி ஒழிப்பது எவ்வளவு அவசி யமோ அவ்வளவு உழைக்கும் மக்களுக்கு ஜன நாயகத்தை விஸ்தரிப்பதும் அவசிய மா கு ம். தொழிலாளிவர்க்கம், பேச் சுரி ைம, பிரசுர உரிமை, பண்பாட்டு உரிமை போன்ற பல உரிமை களே இடைக்கால கட்டத்தில் கண்காணப் பெற வேண்டும். இத்தகைய சுதந்திரங்களைப் பெறுவது, முதலாளி வர்க்கம் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் வரை சாத்தியமில்லை. அந்த ஆதிக்கத்தை ஒழிப்பது உற்பத்தி சாதனங்கள் தனி உடைமையாக இருக்கும் வரை சாத்தியமில்லை. - இனிவரும் பகுதியில் பாட்டாளி வர்க்க சர்வாதி கார அரசு, வர்க்கங்களை ஒழித்து சோஷலிச நிர்மாணத்தில் எவ்வகையான பாதைகளில் செயல் பட்டன என்பதை விளக்குவோம். முக்கியமாக சோவியத் அரசும், கிழக்கு ஐரோப்பிய மக்கள் ஜன. நாயக அரசுகளும் ஆசியாவில் தோன்றியுள்ள சோஷவிஸ்ட் அரசுகளும் சோஷலிச மாற்றம் என்னும் ஒரே குறிக்கோளே எத்தகைய வெவ் வேருன வழிகளில் அடைந்தன என்பதைக் காண் போம். இங்கு தத்துவார்த்த சிந்தனைக்கும். நடை முறை அனுபவத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காண்டதோடு நடைமுறை அனுபவம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய சிந்தனையாளர்களின் 112