பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான கம்யூனிஸ் நிர்மானத்தைத் தங்கள் கடமை யாகவும் ஏற்றுக் கொள்கின்றன. கரண்டல் வர்க்கங்கள் ஒழிந்தவுடன் புல் லுருவிக் குழுக்கள் இல்லாமற்போய் விடுவதில்லை. சேர்ஷலிச வெற்றிக்குப் பின்னரும் நீண்ட காலத் துக்கு பழைய சமுதாயத்தின் எச்சமாக திருடர்கள், கொள்ளக்காரர்கள், ரவுடிகள் போன்ற சமூக விரோதிகள் இருப்பார்கள். குடிமக்களையும், சோஷ விச சொத்துக்களையும், இப்பு ல் லுரு விகளிடம் இருந்து பாதுகாக்க சோஷலிஸ் அரசு வன்முறை யையும் ஒடுக்குமுறைகளையும் பயன்படுத்த வேண் டும். - . அனேத்து மக்களின் அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கடமைகளைத் தொடர்ந்து, முன்னிலும் பெரிய அளவில் செயல்படுகிறது. அனைத்து மக்களுடைய குறிக்கோளும் கம்யூனிஸ் மாக ஆகிவிடுகிறது. இக் குறிக்கோளுக்காக அனைத்து மக்களும் உழைக்கிரு.ர்கள். உள்நாட்டு வர்க்கப் போராட்டம் முற்றுப்பெற்று, சோஷலிச நாடு களின் வர்க்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியமுதலாளித்துவத்தை எதிர்த்து உலக அரங்கில் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றன. சோஷலிச அரசின் வெளி விவகாரக் கடமை கள், அயல் நாட்டுப் படையெடுப்பிலிருந்து தாய் நாட்டைக் காப்பது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப் பிவிருந்து சோஷலிசத்தால் பெற்ற நன்மைகளைப் பாதுகாப்பது முதலியன. உலக அரங்கில் முதலா ஒளித்துவத்திற்கும் சோஷலிஸத்திற்கும் இடையே போராட்டம் நடைபெறும்வரை, ஏகாதிபத்தியம் நிலைத்திருக்கும்வரை, சோஷலிஸ்டு அரசு, தன்து ராணுவ பாதுகாப்பில் கவலையின்றி இருக்க முடியாது. சோவியத் யூனியன் தனது அரசாங்க ፱፱8