பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுகிறது. முழுமையாக கம்யூனிஸம் நிர்மாணிக்கப் பட்ட பின்னர்தான் அரசு உதிர்ந்து போகும். 'ஒவ்வொரு வரிடமிருந்தும், அவரவர் திறமைக்குத் தகுந்த வேலை, ஒவ்வொருவருக்கும் தேவைக்குத் தகுந்த ஊதியம் என்ற விதிமுறையைச் சமுதாயத்தில் அமுலாக்க முடிகிறபோதுதான் அரசு உதிர்ந்து போகும் சமுதாய உறவுகளின் விதிகளை உணர்ந்து மக்கள் அவற்றைத் தாமாக கடைபிடிக்கும் நிலைமை தோன்றிய பின்னர், அவர்களுடைய உழைப்பு, மிகுதியானப் பலன் அளிக்கும் அளவில் உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெற்ற பின்னரும்தான். அவர்கள் தாமாகவே தங்களுடைய திறமைக்கேற்றபடி உழைப்பார்கள். அப்பொழுதுதான் அரசு உதிர்ந்து போகும் காலம்வரும் என்று லெனின் எழுதினர்.