பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வதற்காக. பொருள் உற்பத்தி முறை மாறும் போது சமூக உறவு முறையும் மாறிவிடும், உதாரண மாக முகலாளித்துவ சமுதாய அமைப்பில் பொரு ளுற்பத்திக்கான இயந்திரங்கள் எல்லாம்-சுரங்கங் கள், தொழிற்சாலைகள்,வயல்கள், மின்சாரம் முதலா னவை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந் துள்ளன. இதற்கு முந்திய நிலஉடைமைச் சமுதாய அமைப்பில் இந்த அளவிற்கு இந்த உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடையவில்லை. இந்த அளவிற்கு உற்பத்தி தேவைப்படவுமில்லை. காரணம் 200 வருடங் களுக்கு முந்தைய உலக ஜனத்தொகைக்கு இன்று எவ்வளவோ அதிகமாகிவிட்டது. இந்த உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் முத வாளிகளுக்கு சொந்தமாக இருக்கின்றன. உழைக்கக் கூடியவர்களுக்கு உற்பக்தி சாதனங்கள் சொந்த மாக இல்லை. ஆல்ை இந்த இருவருமே அதாவது உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களும், உழைப்பவர்களும் தங்களுக்காக மட்டும் உற்பத்தி செய்யவில்லை, சமுதாயத்திற்காகத்தான் உற்பத்தி செய்கின்றனர். எனவே அவர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு இயங்கவில்லை. உற்பத்திப் பொருட் களே சமுதாயம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு விநி யோகம் செய்வதன் மூலம், உற்பத்தியாளர்கள் சமூகத்துடன் உறவு கொள்கிருர்கள். இந்த வகையான சமூக அமைப்பில் சமூக உறவு களின் நிலை என்ன? உற்பத்திச் சாதனங்கள் யாருக் குச் சொந்தமாக இருக்கின்றன? இதில் உழைப் பினைச் செலுத்தும் தொழிலாளர் கொள்ளும் பங்கு என்ன?-என்பவற்றைக் காண்போம். கூலியுழைப்பு இதுதான் அடிப்படை. உற்பத்தியாகும் பொருட் கள் சமூகத்தில் பொதுமக்களால் விலை கொடுத்து &căujanpūlf—Wage labour. 器