பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று வேறு அவர்களுக்குள்ளேயே விவாதத்தில் இறங்கினர்கள். இதல்ை சமூக அமைப்பிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசும் போது முதலில் வாழ்க்கைத் தேவைகளை, உற்பத் தியை எப்படிப் பெறுகிருன், அதாவது உற்பத்தி முறை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளல் வேண்டும். அப்போதுதான் உண்மையான மனிதனே அறிய முடியும். மனிதன் உற்பத்தி செய்யும்போது அதன் விளைவாகத் தோன்றும் அனுபவ சிந்தனைப் பிரதி பலிப்புத்தான் சிந்தனை அல்லது கருத்து பொருள் தான் மூலம். சிந்தனை அதிலிருந்து பெறப்படுவது (Derivative). எனவே வரலாற்றியல் பொருள் முதல்வாதம் என்பது ஒவ்வொரு காலகட்டத்தி லுள்ள உற்பத்தி முறைகளை அறிந்து அந்தந்தக் கால கட்டங்களின் உற்பத்தி முறைகளின்கீழ் மனிதர்கள் எ த் தகை ய உறவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்குவது. வாழ்க்கைக்கும், உற்பத்தி முறைக்கும் உள்ள உறவை அறியாததனுல், மேற் கோப்புகளான, பிரதிபலிப்புகளான தத்துவம், கலை, இலக்கியம், சட்டம் போன்ற கருத்துக்களையே வாழ்க்கையின் அடிப்படையாகக் கருதியதில் இருந்து முரண்பட்டு மார்க்ஸ், எங்கெல்ஸ் வரலாற்றியல் பொருள் முதல்வாதத்தை உற்பத்தி முறையின் அடிப்படையில் அமைத்தனர். 3. உற்பத்தியும்-உற்பத்தி உறவுகளும் நாம் போராடுவது, கம்யூனிஸ்ட் கட்சி போரா. டுவது, தொழிலாளர் வர்க்கம் போராடுவது சமுதா யத்தின் பொருள் உற்பத்தி முறையை மாற்று 7