பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் தனக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறன். இது பொருள் உற்பத்தி எனப் படும். பொருள் உற்பத்தி செய்யும்போதே அவன் சிந்திக்கவும் செய்கிான். அகல்ை கருத்துக்களைப் படைக்கிருன். கருத்து உற்பத்திக்கு உதாரணங்கள் -விஞ்ஞானம், இலக்கியம், ஒழுக்கம், சட்டம், தத்துவம், கலைகள் இவை பொருள் உற்பத்தி எனும் புறவியல் அடிப்படைகளிலிருந்து பிறக்கம் மனப் பிரதிபலிப்புகள். சமூக இருப்பு சமூக உணர்வு களுக்கிடையேயான உறவுகளைச் சுருக்கிக் கூறலாம். ஒரு சமுதாயத்தில், அதற்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் இவற்றிற்கம், அச் சமுதாயத்தில் வாழும் மக்கள் இப் புறநிலைபற்றி மனதில் கொண்டிருக்கம் சிந்தனை களுக்கும் தொடர்பு உண்டு. இந்தச் சிந்தனைகள் புற நிலை உண்மைகளின் பிரதிபலிப்புகளாக, அவற்றிற்கு ஏற்றதாக இருக்கும். இந்த உறவின் அடிப்படை பொருள் உற்பத்திதான். எனவே உற்பத்தி சக்திக் கும் உற்பத்தி முறையில் மக்கள் கொள்ளும் உறவிற் கும் உள்ள தொடர்பே இத் தத்துவத்தின் உள் ளடக்கம், மார்க்சிற்க முந்திய தத்துவ ஆசிரியர்கள் அனைவருமே, மனிதன் சிந்திப்பதற்கு முன்ல்ை உணவு உட்கொளல் வேண்டும், உடை உடுத்திக் கொளல் வேண்டும், ஒரு இடத்தில் தங்கவேண்டும், ஒய்வு உறக்கம்வேண்டும் என்ற வாழ்க்கையின் புறத் தேவைகளை பொருளாயதத் தேவைகளை மறந்துவிட் டார்கள். மணிகனுக்கு கேவையெல்லாம் அவனது மனகிலுள்ள சிந்தனை மட்டும்தான் என்று எண்ணி வந்தார்கள். இப்படி அவர்கள் எண்ணி வந்த கால் அவர்களுக்கு ரிமலே உருவமாகக் கோன்றியது. இந்த நிழல் நீண்டிருக்கிறதா, சிறுத்திருக்கிறதா பொருள் 2. À 133–Material production 305# gi 2.ħuš$–Spiritual production §