பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையை ஆராய்ந்தார்கள்; வாழ்க்கைக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள உறவுகளை ஆய்ந்தார்கள். சமூக வாழ்க்கைக்கும், சமூக சிந்தனைக்கும் உள்ள உறவையும் ஆராய்ந்தார்கள். மார்க்ஸும் எங் கெல்லாம் எழுதிய கட்டுரைகளை கால வரிசைப் படுத்திப் பார்த்தால் ஒரு கட்டுரை தத்துவம் பற்றியதாக இருக்கும், மற்றென்று வரலாறு பற்றியதாக இருக்கும். இரண்டிலும் அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாத விதிகளைப் பயன் படுத்தி ஆய்ந்தார்கள். ஏக காலத்தில் அவர்கள் இரண்டையும் ஒரே அடிப்படையின்கீழ் வளர்த் தார்கள். அதனுல் அவர்கள் பொருள்முதல்வாதத் தையும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை யும் வளர்த்தார்கள். அதல்ை எது முதலில் என்ற கேள்வி, முட்டை முதலிலா, கோழி முதலிலா என்ற அணுவசியக் கேள்வியைப் போலாகும். 2. வரலாற்றியல் பொருள் முதல்வாதம் என்ருல் என்ன? இது சமூக இருப்பு, சமூக உணர்வு ஆகிய இரண் டிற்கும் இடையேயான உறவை அறிந்து விளக்க முயலுகிறது.பொருள்முதல்வாதம் இருப்பு, உணர்வு இவற்றின் தொடர்பை விளக்குகிறது. வரலாற் றியல் பொருள் முதல்வாதம் தொடர்பு பற்றிய விஞ்ஞானம்-இாண்டிற்கு முள்ள உறவை வரை யறுப்பது. இதன்பொருள் என்ன? &eps @CŞūl-social being &6p3 a.aoriraj—social coasciousness 蟹 .