பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கம் மாறும்பொழுது, தேவைப் பொருள் தான் உற்பத்தி செய்யப்படும். 1942-43-ல் இந்தியாவில் கடுமையான பஞ்சம். அதே சமயத்தில் கோதுமை அமெரிக்காவில் அதிக உற்பத்தியாகியிருந்தது. லாபம் குறைந்தது, லாபம் குறைகிறது என்பதற்காக அமெரிக்க முதலாளிகள் கோதுமையைக் கப்பலில் ஏற்றி கடலில் கொண்டு போய்க் கொட்டினர்கள். இதேபோல சில வருடங் களுக்கு முன்னல் அமெரிக்காவில் உருளைக்கிழங்கின் விளைச்சல் அதிகரித்தது. உலக மார்க்கெட்டில் விலை குறைந்தது. அமெரிக்காவின் உருளைக்கிழங்கு முதலா ளிக்கு லாபம் குறைந்தது. உடனே கென்னடிஅரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி, உருளைக்கிழங்கு விளையக்கூடிய நான்கு மாகாணங்களிலுள்ள வயல் களிலிருந்து உருளைக்கிழங்கு எடுக்கப்படவில்லை. வயல்களிலேயே அழுக விடப்பட்டது. அதற்கான மார்க்கெட் விலையை விவசாயிகளுக்கு அரசாங்கமே கொடுத்தது. ஆனல் அதே சமயத்தில் அமெரிக்கா வின் தென்பகுதியிலுள்ள நீக்ரோ மக்கள் பசியினுல் செத்தார்கள். அதைப்பற்றி அந்த நாட்டு அரசாங் கமோ, அந்த நாட்டு முதலாளிகளோ கவலைப் படவில்லை. நியூயார்க் நகரத்தில் மட்டும், ஒரே ஒரு மாதத்தில் மட்டும் ஒரு மில்லியன் லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்டது. ஏனெனில் பாலின் விலை குறைந்துவிட்டால் லாபம் குறையும். பால் கிடைக்காவிட்டால் விலை சரியும். அப்படி யானுல், நியூயார்க் நகரத்தில் அனைவருக்குமே போதுமான அளவு பால் கிடைத்துவிட்டது என்ப தல்ல. எத்தனையோ நீக்ரோ குழந்தைகள், தொழி லாளர் குழந்தைகள் பாலின்றி தவித்தன. முத லாளிக்கு லாபம் குறைகிறது என்ருல் லாபத்தை அதிகப்படுத்த சகல வழிகளையும்-அதனல் எத்தனை உயிர்கள் அழிந்தாலும் சரி-கையாளுவான்.

  1. 3