பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். இதல்ை அவர்களிடையே பகைமை நிலவும் வர்க்கங்கள் தங்கள் நலன்களுக்காகப் போராடும். இதுவே வர்க்கப் போராட்டம். நான் இதுவரை கூறி வந்துள்ள உதாரணங்கள் முதலாளித்துவ சமுதாய அமைப்பிலிருந்துதான். ஆளுல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை விதிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் திற்கு மட்டும்தான் பொருந்தும் என்று எண்ணக் கூடாது. மனித வரலாறு முழுமைக்கும் பொருந்தக் கூடியது. எனவே, மனித வரலாற்றில் எத்தனை விதமான சமுதாய அமைப்புகள் இருந்தன-அவை ஒவ்வொன்றும் எப்படி மாறுதலடைந்து வந் துள்ளன, இம் மாறுதல்களின் இயக்க விதிகள் என்ன என்பதை அறியும் விஞ்ஞானமே வரலாற் றியல் பொருள்முதல்வாதம் ஆகும். 4. உற்பத்தி சக்திகள்-புரட்சி மனிதன், தனக்குத் தேவையான பொருள் களைத் தானே உற்பத்தி செய்யத் தொடங்கியதி லிருந்துதான் விலங்கு வாழ்க்கையிலிருந்து வேறு படத் தொடங்கினன். . இதனை எங்கெல்ஸ் ஓரிடத்தில் வேடிக்கையாகச் சொல்லியிருக்கிரு.ர். சிமியன் எனும் ஒருவகைக் குரங்கின் கையமைப்பு 1850-ம் ஆண்டிலிருந்ததைப் போலவே சுமார் 10 லட்சம் வருடங்களுக்கு முன்புமிருந்தது. ஆனல் மனிதனுடைய கையமைப்பு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்குள்ளேயே மிக வேகமாக மாறி வந் திருக்கிறது. இதனை எங்கெல்ஸ், என்னே மனித கைகளின் மகத்துவம் என்று வியக்கிரு.ர். இதை 15