பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து விஞ்ஞான வளர்ச்சியும்தான் ஜெர் மெனிய மக்களுக்கு விடுதலையைத் தேடித்தரும்' என்ருர், நீராவி எப்படி விடுதலை தரும்? நீராவி யின் உபயோகம் வளர்ந்தால் முதல்ாளித்துவம் வளரும். முதலாளித்துவம் வளர வளர அதற்கு இண்ையாகவே தொழிலாளர் வர்க்கமும் அதன் ஒற் றுமையும் வளரும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமை வளர்ந்தால் சமுதாய மாற்றம் அல்லது புரட்சிக்கான பக்குவ நிலைமையும் வளரும்; சமுதாய புரட்சி ஏற்படும். மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிகள் இயற்கை விதிகளின் அடிப் படையில் நடைபெறும், அவை தவிர்க்க முடியா தவை. இதுதான் மார்க்ஸ் குறிப்பிட்ட பொருள் முதல்வாதத்தின் இயக்கயியல் குணம்சம். ஆஞ்ல் இதற்கிடையில் மனிதன் செய்ய வேண்டிய்தும் ஒன்று உண்டு. தவிர்க்க முடியாதபடி நடக்கப் போகின்றவை.தாமே என மனிதன் கையைக் கட்டிக் கொண்டு இருந்துவிட முடியாது. பலமான எதிர் சக்திகள் இந்த வளர்ச்சியை தாமதப்படுத்தலாம் அல்லது திசைதிருப்ப முயலலாம். எனவே அடிப் படையான விதிகளை உணர்ந்து மனிதன் வளர்ச்சிப் போக்கை வழிப்படுத்த வேண்டும். விளக்கு எரிய துண்டுகோலும்தான் தேவை. ஒரு பெண் கருவுற் றிருக்கிருள் என வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில், பிரசவத்திற்கான நிலைய்ை அடைகிருள். விஞ்ஞான விதிகளின்படி நிச்சயமாக் குழந்தை பிறக்கத்தான் போகிறது. இருப்பினும் இடையில் ஒரு தாதி தேவைப்படுகிருள். அந்தத் தாதிதான் புரட்சி. அதாவது நிலைமைகள் பக்குவ மடைந்து ஒரு சமுதாய மாற்றத்திற்கு தயாராக இருந்தாலும் அதனை வழிநடத்திச் செல்ல ஒரு தாதி தேவை. இயற்கையான விதிகளுக்குட்பட்டு இயங் ipir. Gestr-3 17