பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை முறைக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கும். அவை சமமாகவும் இருக்கலாம், ஒன்றை விட மற்ருென்று சிறிது முன்னேறியுமிருக்கலாம். இப்படி சமமாக இல்ல்ாத இடங்களில் செல்வத்தைக் கொள்ளையடிப்பத்ற்காக போர்கள் நடைபெறும். பின்தங்கிய கூட்டம் முன்னேறிய மக்களின் செல் வத்தைக் கொள்ளையடிக்க, அடிக்கடி போர்களில் ஈடுபட்டு செல்வத்தை அபகரித்துச் செல்லும். அந்தக் காலத்தில் செல்வமாக கருதப்பட்டது கால்நடை கள்தாம். அதனால் இந்தக் கால்நடைகளை, குறிப்பாக மாடுகளைத் திருடிக்கொண்டு போவது அந்தப் போர் களில் வழக்கமாக இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் கூட போர்களில் மாடுகள் கடத்தப்பட்டிருக்கின் றன என்பதை நாம் காண முடிகிறது. தொல் காப்பிய நூலில் இம் மாதிரி மாடுகள் கடத்தப் படுதலே, கரந்தை வெட்சித்திணைகள் குறிப்பிடு கின்றன. மாடுபிடிக்கச் சென்று இறந்த வீரனுக்கு அவனது நினைவாக நடுகற்கள் எழுப்பப்படுவது அக் கால வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில், தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் இம்மாதிரி நடுகற்கள் காணப்படுகின்றன. வட ஆற்காடு மாவட்டம் செங்கம் எனும் பகுதியில் காண்ப்படும் நடுகற்களில், மாடுபிடிச் சண்டையில் இறந்த வீரர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவைபற்றிய செய்திகளை செங்கம் நடுகற்கள்' என்ற நூலில் இருந்து அறியலாம். இது போன்ற ஏராளமான போர்கள் அக் காலத்தில் நடந்திருக்கின்றன. போர்கள் என்ருலே வெற்றியும், தோல்வியும் இயற்கை. இந்தப் போர் களில் தோல்வியடையவர்க்ளைக் கொன்று விடுவதே அந்தக் காலத்திலிருந்து வழக்கமாக வந்துள்ளது. ஏனெனில், உணவு என்பது அந்தக் காலத்தில் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே, தன்ளுேடு 24