பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்த சம்பந்தமில்லாத மற்ருெரு இனத்தை சேர்ந்த வனுக்கும் உணவளித்து, கைதியர்க வைத்திருப்பது மேலும் பற்ருக்குறைக்கே வழியாகும். ஆனல் காலப்போக்கில், உழைப்பின் அவசியம் அதிகரித்த போது, தனக்காக மட்டுமன்றி கால்நடைகளுக் காகவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட காலத்தில் போரில் தோல்வியடைந்த வர்களை அடிமைகளாக வைத்திருக்கும் நிலை ஏற் பட்டது. இம்மாதிரி அடிமைமுறை ஏற்பட்டதன் காரணம் உற்பத்தி சக்திகள் வளர வேண்டிய தேவைகள் ஏற்பட்டதால்தான். அடிமை முறை உலகில் எங்கெங்கு இருந்தன என்று ஆராய்ந்து கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து, பாபிலோனியா, கிரீஸ், ஆஸ்திரேலியா, சீன ஆகிய இடங்களில் அடிமை முறைகள் இருந்திருக் கின்றன என்பதற்கு ஆதாரங்கள் கிடைத் துள்ளன. ஆனால் இந்தியாவில், அடிமை முறை இருந்ததென்றும் இல்லையென்றும் இருவிதக் கருத் துக்கள் நிலவுகின்றன. சமீபத்தில்கூட சோவியத் ஆய்வாளர்கள் இந்தியாவில் அடிமைமுறை பற்றி இருவிதக் கருத்துக்களைக் கூறியிருக்கின்றன்ர். சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்கள், மற்ற பகுதி களில் காணப்பட்ட அடிமைகளைப் போலல்லாமல், சிறிது மாறுபட்ட அடிமைகளாக இருந்ததாக வட இந்திய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கெளடில் யர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் மனுஸ்மிருதி எனும் நூலும் சூத்திரர் ஒரு வகை அடிமைகளே என்று கூறுகின்றன. ஆரியர் எனும் இனக்குழு மக் கள் பெருகியபோதும், உற்பத்தி சக்திக்ள் வளர்ச்சி யடைந்தபோதும் வேலைப்பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைப்படுத்தப்பட்ட வேற்று இன மக்களான சூத்திரர்கள் ஆரியர்கள் பிற இடங்களில் காணப்படு கின்ற அடிமைகளைப் போலவே நடத்தியிருக்கின்ற 25