பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னர். சூத்திரர்கள் தான் உழைத்து மற்று இன மக்க ளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நிலையும் இருந் திருக்கிறது. சூத்திரர்கள் என்பது வட இந்தியாவில் மட்டும் ஆரியர் என்ற வேற்று இன மக்களுக்கு இட்ட பெயர். ஆளுல் சூத்திரர்களுக்கும், அடிமைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. அடிமைகளை வாங்கலாம், விற்கலாம். ஆளுல் சூத்திரர்களை வாங்கவோ விற்கவோ முடியாது. அடிமைகளுக்கு மனேவி என்ருே மக்களென்ருே எவரும் கிடையாது. ஆடு மாடுகளைப்போல வாழ்ந்தனர். ஒரு மாட்டை விற்க உரிமையாளனுக்கு எப்படி உரிமை உண்டோ, அதேபோல அடிமைகளை விற்கவும், வாங்கவும் உடைமையாளனுக்கு உரிமையுண்டு. இந்த உரிமை கள் இல்லாவிடினும், ஏறக்குறைய இதே நிலையில் தான் சூத்திரர்கள் வாழ்ந்தார்கள். இந்த சூத்திரர் களின் உழைப்பினுல்தான் மாபெரும் சாம்ராஜ்யங் கள் தோன்றியிருக்கின்றன. பெரும் செல்வம் உற் பத்தியாகி இருக்கிறது. அசோகரின் சாம்ராஜ்யம், மெளரிய சாம்ராஜ்யம் போன்ற அநேக சாம்ராஜ் யங்கள் அனைத்துமே சூத்திரர்களின் உழைப்பில்தான் உற்பத்தியாயின. இதனை இந்திய சரித்திர மார்க்ளியே ஆய்வாளர்களில் தலை சிறந்தவரான டி. டி. கோசாம்பி தனது நூலில் நிரூபித்துக் காட்டி யுள்ளார். அடிமை முறைச் சமுதாய அமைப்பு தோன்றிய போது உற்பத்தி முறைகளும் மாறிவந்திருக்கின்ற்ன. முந்தைய அமைப்பில், மக்களனைவரும் சுதந்திரமாக இருந்திருக்கின்றனர். உற்பத்திச் சாதனங்களும் எவ ருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. சமுதாய்ம் முழு வதற்கும் _உற்பத்திச் சாதனங்கள் சொந்தமாக இருந்திருக்கிறது, ஆனல் அடிமைச் சமுதாயத்தில் உற்பத்திக் கருவிகளுக்கு சொந்தக்கார்ன் உண்டு. 26