பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் நிலச்சொந்தக்காரர்களே ஆளும் வர்க்க மாக ஆகும் அளவுக்கு சமுதாய உற்பத்தியில் அவர் களுடைய ஸ்தானம் உயரவில்லை. இதுதவிர, உற்பத்தியாகும் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்முெரிடத்திற்கு கொண்டுசென்று விற்பனை செய்யும் வியாபாரிகளும் இருந்தார்கள். உற்பத்தியாகும் பொருள்களிலிருந்து வேறு சில பொருள்களை உற்பத்தி செய்கின்ற சிறு தொழில் உரிமையாளர்களும் இருந்தார்கள். அதாவது, கிடைக்கின்றதோலிலிருந்து செருப்பு செய்வார்கள்; தச்சு வேல் செய்வார்கள். ஆளுல் இதுபோன்ற எல்லாப் பிரிவினருமே ஆண்டை-அடிமை என்ற பெரும் வர்க்கப் பிரிவின் உறவுகளுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தார்கள். அடிமைச் சமுதாய அமைப்பின் தொடக்க காலத்தில் உற்பத்திக் கருவிகளும் புதுமையடைந் தன. அனுபவ அறிவின் அடிப்படையும், தேவை கனின் அதிகரிப்பும் கருவிகளை அபிவிருத்தி செய்தன. ஆளுல் பிற்காலத்தில் உற்பத்திக் கருவிகள் வளராத நிலை ஏற்பட்டது. ஏனெனில், உற்பத்திக் கருவி களைப் பயன்படுத்திய அடிமைகள், தாம் எவ்வளவு தான் உழைத்தாலும், கருவிகள் நவீனப்படுத்தின லும் தமக்குக் கிடைப்பதென்னவோ வெறும் சோறு மட்டும்தான் என்ற உண்மையை உணரத் தலைப் பட்டார்கள். ஒழுங்கமைந்த குடும்ப வாழ்க்கையோ, உழைப்பிற்கான கூலியோ, எதுவும்ே தமக்குக் கிடைக்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்ட தால் அடிமைகளுக்கிடையில் உழைப்பிற்கான உற்சாகம் குன்றி, அதிருப்தியும் அதன் தொடர்ச்சி யாக சோம்பலும் வளர்ந்தது. இந் நிலையினல் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைய் முடியவில்லை. அடிமைகளுக்கும் ஆண்டைகளுக்குமிடையில் பெரும் போராட்ட்ங்க்ள் நடைபெறத் தொடங்கின. 28