பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமைச் சமுதாயத்தில் நடைபெற்ற போராட் டங்கள் அனைத்துமே, அடிமைகளின் கஷ்டங்கள் குறைய வேண்டும் என்பதற்காக மட்டுமே நடந்த போராட்டங்கள். அடிமைச் சமுதாய அமைப் பினையே முழுமையாக மாற்றி புதியதொரு அமைப்பினை ஏற்படுத்துவதற்கான புரட்சிகரமான போராட்டங்கள் அல்ல. இந்தப் போராட்டங் களில் ஈடுபட்டவர்களும், சமுதாய அமைப்பினை மாற்றக்கூடிய புரட்சிகரச் சக்திகளும் அல்லர். சிறு சிறு கூட்டங்களாக அடிமைகள் நாட்டை விட்டு தப்பியோடினர். அவர்களில் பெரும்பான்மையினரும் பயங்கர் மாகக் கொல்லப்பட்டனர். சில பெரிய போராட் உங்களும் நடைபெற்றன. கி. மு. 60-ம் ஆண்டு களில் ரோமில், சுமார் 6 வருடங்களாக ஸ்பார்ட்ட கஸ் என்ற தலைவனின்கீழ் அடிமைப் போராட்டங் கள் நடைபெற்றன. ஆனல் இந்தப் போராட்டங் கள் அடக்கியொடுக்கப்பட்டன. பல நாடுகளில் உள்ள, பயிற்சி பெற்ற கட்டுப்பாடான ஆயுதங் தாங்கிய படை வீரர்கள் அடிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டனர். அடிமைகள் போர்ப் பயிற்சியோ, ஆயுதங்களோ, கட்டுப்பாடோ, உறுதி யான தலைமையோ இல்லாதவர்கள். எனவே மிக எளிதாக அடிமைகள் ஒடுக்கப்பட்டனர். தோற்றுப் போன அடிமைகளில் 6,000 பேர் சிலுவையி லறைந்து கொல்லப்பட்டனர். (இதுவே மரண தண்டனையை நிறைவேற்றும் பழைய ரோமானிய முறை) அடிமைகளுக்கு ஒரு தெளிவான நோக்கமு மில்லை. சில குறைந்தபட்ச உரிமைகள் தமக்கு இல்லை என்ற எண்ணத்தினுல் மட்டுமே இந்தப் போராட்டங்கள் விளைந்தன. அடிக்கடி நடந்த இந்தப் போராட்டங்களினல் உற்பத்தியில் o ஏற்பட்டது. போராட்டக்காலங்களில் அடிமைகள் 29.