பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபுக்கள் பிரதானமற்ற வர்க்கங்கள் ஆவார்கள். சிறு விவசாயியும், நடுத்தர விவசாயியும் வளர்ச்சி பெற்ற நாடுகளிலும், வளர்ச்சியடையாத நாடுகளி லும் அதிகத் தொகையினராக இருக்கிருர்கள். இவர்கள் முதலாளித்துவம் மேலும் வளர்ச்சியடை பும்போது நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினின்றும் முத லாளித்துவ ஆதிக்கத்தினுள் வருகிருர்கள். பிரதான வர்க்கங்கள், பிரதான மற்ற வர்க்கங்கள் என்ற இரண்டைத் தவிர வேறு பல சமூக பிரிவுகளும் ஒரு சமுதாய அமைப்பினுள் இருக்கலாம். தற்கால சமுதாயத்தில் அப்பிரிவுகளில் முக்கியமானது அறி வாளிப்பகுதி. இது ஒரு தனி வர்க்கமல்ல. இதன் அமைப்பு பல தன்மைப்பட்ட கலவையான மூலங் களைக் கொண்டது. சமுதாய உற்பத்தி முறையில் இவர்களுக்கென சுயேச்சையான உறவு கிடையாது. அறிவாளிப் பகுதியினர் நிபுணத்துவம் உடைய மூளை வேலையையோ அல்லது சாதாரண மூளை வேலையையோ செய்யும் பகுதியினர். இப்பகுதியின ரின் தொகை பல வர்க்கங்களில் பிறந்தவர்கள் மூளைத் தொழில்களே செய்யும்போது அதிகரிக்கிறது. இப்பகுதிகளில் பல பிரிவினர் வெவ்வேறு வர்க்கங் களின் நலனுக்காக தொழில் புரிகிரு.ர்கள். அடிமைச் சமுதாயத்திலும், நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சிறிதளவாக இருந்த இந்த சமுதாயப்பகுதி முதலா ளித்துவ சமுதாயத்தில் சிறப்பான சமூகப் பகுதி யினர் ஆகிவிட்டார்கள். அடிமைச் சமுதாயத்திலும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சமுதாயம் சில அந்தஸ்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளுக்கு அடிப்படை பொருளாதார வர்க்கப் பிரிவுகள்தான். ஆனால் அப் பிரிவுகளுக்கு சட்ட பூர்வமாக அவர்களுடைய அந்தஸ்து நிலைகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஒரு அந்தஸ்து நிலையி விருந்து அதற்கு மேலுள்ள அந்தஸ்து நிலைக்கு உயர் 39.