பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு சமுதாயத்தின் அமைப்பு சிக்கலானதாக இருக்கும். ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் மேலோங்கி நிற்கும் உற்பத்தி உறவுகளோடு கூடவே அழித்துவரும் பழைய உற்பத்தி முறையின் எச்சங் களும் இருக்கும். இங்கே பழைமையும், புதுமையும் முரண்பட்டு நிற்கும். இச் சமுதாயத்தின் வர்க்க அமைப்பில் எல்லா உற்பத்தி உறவுகளின் முரண் பாடும் வெளிப்படும். சமுதாய வரலாற்றை அறிவ தற்கு ஒவ்வொரு சமுதாயத்திலும் பிரதான வர்க்கங் கள் எவை என்ற் கேள்விக்கு ப்தில் காணவேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் இது ஒரு ஜோடியாக இருக்கும். பிரதான வர்க்கம் என்ருல்என்ன? வர்க்கங் கள் என்ருல் என்ன? ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் உள்ள பிரதான உற்பத்தி முறையில் பங்கு கொள்ளும் வர்க்கங்கள் பிரதான வர்க்கங்கள் ஆகும். எனவே, ஒவ்வொரு சுரண்டல் சமுதாய அமைப்பிலும்,பொதுவாக இருபிரதானவர்க்கங்கள் இருந்து வந்திருக்கின்றன. அடிமையுடைமைச் சமு தாயத்தில் அடிமைச் சொந்தக்காரர்களும் அடிமை களும்; நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலச் சொந்தக் காரர்களும் குடியானவர்களும்; முதலாளித்துவ சமு தாய அமைப்பில் பூர்ஷாவாக்களும் பாட்டாளி வர்க்கமும். பிரதானமற்ற வர்க்கங்கள் என்பவை பழைய உற்பத்தி முறையின் எச்சங்களில் காணப் படும் வர்க்கங்களாகவோ அல்லது புதிய உற்பத்தி முறையின் துவக்கத்தில் தோன்றுகிற வர்க்கங்களா கவோ இருக்கும். உதாரண்மாக், நிலப்பிரபுத்துவ காலத்தின் இறுதியில் முதலாளி வர்க்கமும் தொழி வாளர் வர்க்கமும் தோன்றுகின்றன. நிலப்பிரபுத் துவம் அழிந்து முதலாளித்துவம் தோன்றுகிறபோது இவ்விரு வர்க்கங்களும் பிரதான வர்க்கங்களா கின்றன. தற்காலத்தில் முதலாளித்துவ நாடுகளில் நிலப்பிரபுத்துவ உறவுகளில் எஞ்சியிருந்தால், நிலப் 38.