பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத்தை இயக்கவும் உரிமையற்றவர்களாக இருக் கிருர்கள். தற்காலத்தில் ஏகபோக முதலாளிகள் தொழில் நிர்வாகத்தை சம்பளம் பெறும் நிர்வாகி கள், என்ஜினியர்கள், தொழில்நுனுக்க வல்லுநர்கள் மூலம் நடத்துகிருர்கள். ஏகபோக முதலாளிகள் தற்காலத்தில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை யாளர்களாக இருப்பதால் மட்டுமே புல்லுருவித் தனமான வாழ்க்கை வாழ முடிகிறது. உற்பத்தியி லிருந்து ஒவ்வொரு வர்க்கமும் பெறுகிற பொரு ளின் பங்கு அவர்கள் உற்பத்திச் சாதனங்களோடு கொண்டிருக்கிற தொடர்பைப் பொறுத்திருக்கும். அதாவது அவை யாருடைய உடைமை என்ற விஞ. வின் விடையைப் பொறுத்தது. சுரண்டல்களின் வடிவத்திற்கு ஏற்றபடி, சுரண்டல் வர்க்கங்களின் பங்குஇருக்கும். அடிமை சொந்தக்காரர்கள் அடிமை களிடமிருந்து வன்முறையால் உழைப்பின்விளைவான உபரிப் பொருளைப் பெற்ருர்கள். நிலப்பிரபுக்கள் வன்முறையால் அல்லாமல் குத்தகை, நிலவாரம், இலவச உழைப்பு முதலிய முறைகளால் லாபம் பெற்ருர்கள். முதலாளிகள் மறைமுகமான இலவச உழைப்பினுல் அதாவது உபரி மதிப்பினுல் கொள்ளே லாபம் பெறுகிரு.ர்கள். மேற்கூறியவற்றின் மூலம் வர்க்க சமுதாய அமைப்புகளில் ஒரு வர்க்கம் மற்ருெரு வர்க்கத்தின் உழைப்பை கைப்பற்றிக் கொள்ளுகிறது என்பது தெளிவாகிறது. வர் க் க ப் பகைமையின் மூல காரணம் இதுவே. இதுதான் பகைமை வர்க்கங் களின் நலன்கள். சமரசம் செய்துவிக்க முடியாது என்பதன் பொருள். ஆகையால் பகைமை வர்க்க சமுதாயங்களில் வர்க்க போராட்டம் எதேச்சை யானதென்று எண்ணக்கூடாது. அது தவிர்க்க முடியாத சமுதாய வளர்ச்சி விதி ஆகும். 37