பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை அவர்களுடைய அரசியல் அதிகாரத்தினுலும் அர சாங்க இயந்திரத்தினுலும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளுகிரு.ர்கள். முதலாளித்துவ அ ர சி ய ல் சட்டங்களில் தனிச் சொத்துரிமை புனிதமாகவும், மாற்ற முடியாததாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இந் நில்ைய்ால் உழைக்கும் மக்களைக் கொள்ளையடிப் பதற்கு சட்ட பூர்வமான உரிமை அளிக்கப் பட்டு ள் ளது. உ ற் பத் தி சாதனங்களோடு வர்க்கங்களுக்குள்ள உறவுகள்தான் உழைப்பை சமுதாயத்திற்குப் பயன்படுத்துவதில் அவ்வர்க்கங் கவின் பாத்திரத்தை நிர்ணயிக்கின்றன. இது பற்றி மார்க்ஸ் கூறுவதாவது: "ஒரு முதலாளி தொழில் துட்பத்தை நிர்வாகம் செய்வதால் முதலாளியாக இருப்பதில்லே. ஆளுல் முதலாளியாக இருப்பதா லேயே தொழிலை நிர்வாகம் செய்கிருன் , எல்லா வர்க்க சமுதாய அமைப்புகளிலும் சுரண்டும் வர்க் கங்கள் உற்பத்திச் சாதனங்களுக்கு சொந்தமாயிருப் புதால் உற்பத்தியை நிர்வகிப்து, அரசாங்கத்தை iர்வகிப்பது, கருத்துலகில் ஆதிக்கம் செலுத்துவது ஆகிய உரிமைகளைப் பெறுகிரு.ர்கள். உதாரணமாக, அடிமை உற்பத்தி சமுதாய அமைப்பில் அடிமைச் சொந்தக்காரர்கள் அரசாங்கத்தை நிர்வகித்தார் கள் தத்துவத்தைப் படைத்தார்கள்; பண்பாட்டைப் படைத்தார்கள்: உற்பத்தியை நிர்வகித்தார்கள். இதுபோலவே ஒவ்வொரு வர்க்க சமுதாய அமைப் பிலும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் கள்தாம் பொருளாதார வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஆன்மீக பண்பாட்டுத் துறையிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆல்ை உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பைச் செலுத்துவதற்கான உற்பத்திச் சாதனங்களில் உரிமையற்றவர்களாக இருப்பதால் உற்பத்தியை வழிப்படுத்தவும் சமுதா 36