பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்கு சவக்குழி தோண்டக்கூடிய வர்க்கத்தையும் தோற்றுவித்தது. முதலாளித்துவ அமைப்பில் இரு பிரதான வர்க்கங்களாக, (main classes) ஒன்றுக் கொன்று முரண்பட்ட இரு பெரும் பிரிவுகளாக தொழிலாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் நில வுடன் ம்யின் வயிற்றிலேயே தோன்றி இரட்டைப் பிள்ளைகளாக உருவெடுத்தன. நாம் முன்னுல் வர்ணித்த சமுதாய அமைப்பு முறைகளில், வர்க்க உறவுகளையும், வர்க்க அமைப் பையும் பற்றி இப்பகுதியில் விவரிப்போம். புராதன சமுதாய அமைப்பில், வர்க்கப் பிரி வினைகள் தோன்றவில்லை; அடிமை சமுதாய அமைப் பில்தான் முதன்முதலில் வர்க்கப் பிரிவினைகளும் வர்க்கப் போராட்டங்களும் தோன்றின. வர்க்க சமுதாய அமைப்புகளில் ஒவ்வொரு வர்க்கமும் உற்பத்தி முறைகளில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தை வகிக்கிறது. ஒரு வர்க்கம் மற்ருெரு. வர்க்கத்தை அடக்கி அதன் உழைப்பை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறது. பிரதான வர்க்கங்கள் ஒன்றிற்கொன்று பகைமை, முரண்பாடு கொண் டெே} . சமுதாய உற்பத்தி முறையில் வர்க்கங்களுக்கு இருக்கும் ஸ்தான வேறுபாட்டிற்குக் காரணம் உற் பத்தி சாதனங்களும் அவற்றிற்கு இருக்கும் உரிமை வேறுபாடுகள் ஆகும். எல்லாவித பகைமை வர்க்க வேறுபாடுகள் உடைய சமுதாய அமைப்புகளில் சில வர்க்கங்கள் உற்பத்தி சாதனங்களை உடைமை யாகக் கொண்டுள்ளன. இதல்ை அவை பிற வர்க் கங்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன. உடைமை உரிமையும், சுரண்டல் உரிமையும் சட்ட பூர்வ மாக ஆக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சுரண்டல் காரர்களின் சொத்துரிமைக்கு ச ட் டங்க ளில் 35