பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளிகளும் வியாபார முதலாளிகளும், முத லாளித்துவ வளர்ச்சியில் ஆதிக்க பாத்திரம் பெற்றி ருந்தனர். முதலாளித்துவம் ஏகபோகங்களாக வளருவதற்கு முந்திய காலத்தில் தொழில் முதலாளி கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஏகாதிபத்திய கால கட்டத்தில், ஏகபோக முதலாளிகள் சர்வாதிக்கம் பெற்றுள்ளனர். சமுதாயத்திற்குத் தேவையான பொருள் உற்பத்தி முழுவதும் தற்காலத்தில் ஏக போக முதலாளிகள் கையிலேயே உள் ள து. அமெரிக்க பெருமுதலாளிகள் உலகத்தின் பொருள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கும் பெருவளர்ச்சி பெற்றுள்ளனர். தங்கள் நாட்டுச் செல்வத்தில் அவர் கொண்டுள்ள ஆதிக்கத்தால் உலக முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த முயலுகிருர் கள். அந்நிய நாட்டு உறவுகளாலும், ராணுவக் கூட்டுகளாலும், காலனியாதிக்கக் கொள்கையா லும், பொருளாதார ஊடுருவல்களாலும், வியாபா ரங்களாலும் உலகத்தையே அவர்கள் கொள்ளை யடித்து வருகிருர்கள். யுத்தக் கருவிகளைச் செய்து குவிக்க தங்கள் அரசைத் துரண்டுகிருர்கள். இப்பகுதி முக்கியமாக அமெரிக்காவில் உள்ளது. வேறு நாடு களில், உதாரணமாக ஜப்பான், மேற்கு ஜெர்மனி யிலுள்ள பெரு முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, போட்டிகளைத் தவிர்த்து பல நாட்டு ஏகபோகங்களாக பெருக்கமடைந்துள்ளார்கள். ஏகபோகமல்லாத முதலாளித்துவமும் சுரண் உல் தன்மையுடையதுதான். அது தொழிலாளர் களைச் சுரண்டுகிறது. ஆனால் அது ஏகபோகங்களால் பலவகையிலும் நெருக்கப்படுகிறது. எனவே அதன் நலன்கள் எப்பொழுதும் ஏகபோகங்களின் நலன் களோடு ஒத்துப்போவதில்லை. சில சமயங்களில் தனது நல்ன்கள், ஏகபோகங்களின் நலன்களுக்கு முரணுக இருக்கும்பொழுது அவை ஏகபோகங்களை 43