பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்படுத்த வேண்டும். நிலப்பிரபுக்களின் சுரண்டலே முழுவதும் அகற்ற வேண்டும். மூன்ருவது தொழிலாளிகளுக்கும் விவசாயி களுக்கும்இடையேயுள்ள் வர்க்க வேறுபாடுகளை நீக்க வேண்டும். நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையே யுள்ள வேறுபாடுகளை அகற்ற வேண்டும். சோஷலிஸ்கட்டத் துவக்கக் காலத்தில் பல வகைப் பொருளாதார அமைப்புகள் இருக்கும். முத லாளித்துவ அமைப்பிலிருந்து சோஷலிஸ் அமைப்புத் தோன்றுகிற காலத்தில், சோஷலிஸ்டு உற்பத்தி, சிறு உடைமை உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி ஆகிய உற்பத்தி முறைகள் ஒரே சமயத்தில் செயல் படும். இந்த அமைப்புகளுக்குரிய தொழிலாளி வர்க் கம், சிறு உற்பத்தியாளர் வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் மூன்றும் உற்பத்தி உறவுகள் கொண்டிருக் கும். நிலப்பிரபுக்கள். நிலவுடைமை ஒழிக்கப்பட்டு விடுவதால் ஒரு வர்க்கமாக இருக்க மாட்டார்கள். தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாகிறது. உடைமை வர்க்கங்களை ஒழிப்பதற்காக அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமைத்துக் கொள்கிறது. அரசியல் அதிகாரத்தையும், உற்பத்தி சாதனங்களின் உடைமையையும் இழந்து விட்ட தால் முதலாளித்துவ வர்க்கம் பிரதான வர்க்கம் என்ற நிலையிலிருந்து, பிரதான மற்ற வர்க்க மாகத் தாழ்ந்து விடுகிறது. அடக்கப்பட்ட வர்க்க மாயிருந்த தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்க மாகிறது. இவ்வர்க்கம், சோஷலிஸ்டு நிர்மா ணத்திற்கு வழிகாட்டியாகவும், அமைப்பாளியாக வும் மாறி விடுகிறது. உழைக்கும் விவசாயி வர்க்கம் பிரதான துணைவர்க்கம் ஆகிறது. சிறு விவசாயி களும், விவசாயத் தொழிலாள்ர்களும், நிலப் பிரபுக்களின் கரண்டலினின்றும் விடுதலை பெறுகி {