பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்கள். கூட்டுப் பண்ணைகளின் தோற்றத்தில் எண் னிக்கையில் மிகுதியான விவசாயிகள், முதலாளி களை ஆதரிப்பார்களா அல்லது தொழிலாளிகளை ஆதரிப்பார்களா என்பதைப் பொறுத்துள்ளது. எனவே தொழிலாளி வர்க்கம் உழைக்கும் விவசாயி களே சோஷலிஸ்ப் பாதையில் வழி நடத்தி, அவர்களுடைய ஆதரவைப் பெற வேண்டும். இதற். குத் தேவையான போராட்டம் முன்னர் தொழி லாளி வர்க்கம் நடத்திய விரோதப் பான்மையான போராட்டமல்ல. தொழிலாளி வர்க்கம், விவசாயி கன் நண்பர்கள் என்ற உணர்வில் அவர்களோடு விவாதித்தும், அவர்களே வற்புறுத்தியும், பொறுமை யாக விளக்கம் தந்தும், சோஷலிஸ் உணர்வை வளர்த்து, தன்ளுேடு உறுதியாக இணைத்துக் கொள்ள வேண்டும். இக் காலக் கட்டத்தில் சிறு உற்பத்தியாளர் வர்க்கத்தை, நடுநிலைமை நிலையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் இரட்டைத் தன்மையுடையவர் கள். அவர்கள் பெரு முதலாளிகளின் சுரண்டலுக் குட்பட்டவர்கள். ஆஞ்ல் அவர்களே தொழி லாளிகளை சுரண்டுபவர்களும் ஆவார்கள். அவர்களை முதலாளிகள் பக்கம் தள்ளிவிடக் கூடாது. இக்கால கட்டத்தில் ஐந்து விதமான வர்க்கப் z போர்ட்ட வடிவங்கள் தோன்றக்கூடும். முதலாவது: கரண்டல்காரர்களின் எதிர்ப்பை ஒடுக்க வேண்டும். வர்க்கப் போராட்டத்தின் நில மைக்கும், நாட்டின் சமுதாய நிலைகளுக்கும் ஏற்ற வாறு, பொருளாதார, அரசியல் ராணுவ நிலைமை களை தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது சுரண்டல்காரர்கள் தமது பழைய உடைமைகளைக் கைப்பற்றிக் கொள்ள ஆயுதம் 62;