பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கி போராட முற்பட்டால், ஆயுதம் தாங்கி தொழிலாளி வர்க்கமும், அதன் வர்க்க அரசும் உள்நாட்டுப் போரில் ஈடுபட நேரிடும். ஆயுதம் தாங்கிப் போராடி, விரோதமான வர்க்கங்களின் எதிர்ப் புரட்சியை அடக்க வேண்டும். மூன்ருவது: சிறு உடைமையாளர்களை விரோ தித்துக் கொள்ளாமல் நடு நிலைமையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது பற்றி முன்னரே குறிப் பிட்டோம். நான்காவது: புதிய சோஷலிஸ்டு சமுதாயத்தில் உற்பத்தியில் பங்காற்றுவதற்கு, அறிவாளிப் பகுதி இராது. அதல்ை இறமைப் பெற்ற முதலாளித்துவ அறிவாளிப் பகுதியின் திறமையை சோஷலிஸ் நிர் மானப் பணிக்கு பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் களே சோஷலிஸ்டு உணர்வுடையவர்களாக மாற்று வது ஒரு முக்கியமான பணியாகும். ஐந்தாவது: இக் காலத்தில், ஒரு புதிய கட்டுப்பாட்டை அமுல் படுத்த வேண்டும். “ஒவ் வொரு புதிய சமூக அமைப்பிற்கும், புதிய மனித உறவுகளும் புதிய கட்டுப்பாடுகளும் தேவை: என்று லெனின் எழுதினர். சோஷலிசத்தைக் கட்டி அமைப்பதற்கு, சுரண்டல் வர்க்கங்களை ஒழித்த் விட்டப்பிறகு, சிறு உற்பத்தியாளர்களின் மனப்பான் மையை மாற்றியும், முதலாளித்துவ அறிவாளிப் பகுதியாளரையும், சோஷலிஸ் உணர்விற்கு மாற் றத் தீவிர முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் பழைய சிந்தனைகளையும் சோஷவிஸ் சிந்தனையால் மாற்ற வேண்டும். எனவே முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத் திற்கு, சமுதாயம் மாற்றப்படுகிற கால கட்டத்தில் தனது குறிக்கோள்களையும் மேலும் வளர்ப்பதால் 63.