பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுடைய புற வாழ்க்கையும் அக வாழ்க்கை யும் வளர்ச்சி பெறுகின்றன. பொருளாதார, அர சியல் நலன்களில் ஒன்றுபட்டு, தொழிலாளி வர்க்க மும், விவசாயி வர்க்கம் உறுதியான நேச சக்திகளா கின்றன. இவ்வர்க்கங்களிலிருந்தே படித்துப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் புதிய சோஷலிஸ்டு அறிவாளி பர்க்கமாக வளருகின்றனர், சமுதாய அமைப்பு புரட்சிகரமாக மா றியபின் வர்க்கங்களின் உறவுகளின் தன்மையும், போராட் உத்தின் தலையும் மாறுகின்றன. வர்க்கப் போராட் டம் இக்காலத்தில் முடிந்து விடுவதில்லை. ஆனல் அதன் கடமைகளும், வடிவங்களும் வழி முறைகளும் மாறிவிடுகின்றன, ஏனெனில், தொழிலாளி வர்க் கம் இப்பொழுது ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இல்லா மல், ஆளும் வர்க்கமாக அரசாங்க அதிகாரத்தைக் கைவசம் கொண்டுள்ளது. இந்த அதிகாரத்தை அது பழைய உடைமை வர்க்கங்களின் எதிர்ப்பை அடக்கு வதற்கும், சோஷலிஸ்டு மாற்றங்களை ஏற்படுத்தவும் அது பயன்படுத்துகிறது. இந்தக் கால கட்டத்தில் பிரதான முரண்பாடு தொழிலாளி வர்க்கத்திற்கும், பழைய முதலாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடாகும். சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், அழிந்து வரும் முதலாளித்துவத் திற்கும், வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கத்திற் கும் பலமுனைப் போராட்டங்கள் நடைபெறும். தனது கடமைகளே நிறைவேற்றுவதற்காக தொழி லாளி வர்க்கம் தீவிரமாகப் போராட வேண்டி யுள்ளது. ஆளுல் போராட்டத்தின் வடிவங்களும், வழி முறைகளும் பெரிதும் மாறுதல் அடைகின்ற்ன. இக்கால கட்டத்தின் வர்க்கப் போராட்டம் சமு தாய வளர்ச்சிக்குரிய உந்து சக்திகளில் ஒன்ருக இருக்கிறது.