பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு சமுதாயம் மாறும் கட்டத்தில் வர்க்க முரண்பாடுகள் மறைதல் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு சமுதாயம்_மாறுகிற காலகட்டம் முடிவடையும் பொழுது சோஷலிச உற்பத்தி முறைகள் உறுதிப் படுகின்றன. இப்பொழுது சமுதாய அமைப்பில் வர்க்க முரண்பாட்டு நிலைமை பெரிதும் மாறுதல் அடைகிறது. சுரண்டும் வர்க்கங்கள் மறைந்து விட்ட பின்னர், நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைந்துவிட்ட பின்னர், உடலுழைப்பிற்கும். மூளை உழைப்பிற்கும் வித்தியாசம் இல்லாமற்போன பின்னர், இரண்டு நேச வர்க்கங்களே, சோஷலிஸ் சமுதாயத்தில் மிஞ்சுகின்றன. இவற்ருேடு மக்கள் அறிவாளிப் பகுதியும் வளர்ச்சி பெறுகிறது. சமுதாய அமைப்பின் தீவிர மாற்றங்களின் காரணமாக சமுதாய வர்க்கங்களின் நிலைமைகளி லும் மாறுதலேற்படுகிறது. தொழிலாளி வர்க்கம் சுரண்டலிலிருந்து முற்றிலும் விடுதலையடைந்து சோஷலிச தொழில்களில் பணிபுரிகிறது. முதலா ளித்துவ தொழில்களில் பணிபுரியும் தொழிலாளி கள் யாருமில்லை. விவசாயிகள் சிறிய நிலவுடைமை யாளர்களாக இருந்த நிலைமை மாறி, பெரிய கூட் டுறவுப் பண்ண்ைகளில் பணி புரிகிருர்கள். பழைய சமுதாயத்தில் இருந்த ஏழை விவசாயி, நடுத்தர விவசாயி, பணக்கார விவசாயி என்ற பிரிவுகள் இப் புதிய சமுதாயத்தில் இல்லாமற் போய்விடு கிறது. அறிவாளிப் பகுதி முழுவதும் உழைக்கும் மக்களின் குடும்பங்களிலிருந்து தோன்றுகிறது. மக்களிடையே இருந்து தோன்றி மக்களுக்குப் பணி புரியும் வர்க்கமாக அது இருக்கிறது. தொழிலாளி கள் விவசாயிகள் ஆகிய அனைத்து உழைக்கும் மா. கொ-5 65