பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுக்க முயல்கிறது. மாறுதலே விரும்பும் சமூக சக்தி கள் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பு படிப்படியாக ஒன்றுபட்ட செயலாக வளர்ச்சி பெறுகிறது. பழைய சமுதாய உறவுகளைப் பாதுகாக்க முயலுகிற ஆளும் வர்க்கத்தின் வன் முறைக்கு எதிராக முற்போக்கு சக்திகள் வன்முறை யைப் பயன்படுத்தி எதிர்க்கத் தொடங்குகின்றன. இந்நிலையில் வர்க்கப் போராட்டம் அதிகபட்சத் தீவிரத் தன்மை அடைகிறது. இந்நிலைமையைத்தான் சமுதாய புரட்சி என்று மார்க்ளியே வாதிகள் அழைக் கிருர்கள். . அடிப்படை, மேற்கோப்புகளின் தீவிரமாற்றம் உற்பத்தி உறவுகளுக்கும், வளர்ந்து வருகிற உற்பத்தி சக்திகளுக்கும் இடையே ஏற்படும் முரன் பாடுதான் சமுதாய புரட்சியின் பொருளாதார அடிப்படையாகும். மார்க்ஸினுடைய வரையறுப் பின்படி, உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளி னுடைய வளர்ச்சிக்குத் தடையான விலங்குக ளாகும்போது சமுதாய புர்ட்சி பிறப்பதற்குரிய காலம் நெருங்கி வருகிறது. இம் முரண்பாடு சமு தாயப் புரட்சியால் தீர்த்து வைக்கப்படுகிறது, புதிய உறவுகள் தோற்றுவிக்கப் படுகின்றன. சமுதாய புரட்சி என்பது சமுதாய உறவு கள் அனைத்தையும் முற்றிலும் மாற்றியமைத்து புதியதொரு சமூக, பொருளாதார அமைப்பைத் தோற்றுவிப்பதாகும். எனவே புரட்சி பொருளா தார அடிப்படையையும், அதன் மேற்கோப்பை யும் பெரிதும் மாற்றியமைக்கிறது. பொருளாதார அமைப்பு மாறுவதோடு மட்டுமல்லாமல் பழைய அமைப்பின் அரசியல் போக்குகள் சட்ட உரிம்ை கள் போன்ற மேற்கோப்புகளும் முற்றிலும் மாற்றப் படுகின்றன. தத்துவார்த்தம், அரசியல், ஒழுக்கம். 6?