பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்கமும அரசியல் அரங்கில் தோன்றின. முதலா வரித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தோடு நிலப் பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியின் கால கட்டமும் துவங்கிற்று. இது சுமாராக 16-ம் நூற்ருண்டில் துவங்கிற்று. ஒவ்வொரு நாடாகப் பார்த்தால் முத லாளித்துவப் புரட்சியின் ஆரம்ப காலம் சிறிது முன் பின்னுக இருக்கலாம். சில நாடுகளின் முதலாளித் துவ புரட்சியின் காலங்களை கீழே குறிப்பிடுவோம். நார்வே, டென்மார்க்- 1566 - 1609 இங்கிலாந்து - 7む望 - #む53 அமெரிக்கா — 1775 – 1783 பிரான்ஸ் — # 789 – 1794 ஒவ்வொரு முதலாளித்துவப் புரட்சியும் அந்தந்த நாட்டு வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்க சேர்க்கைகளைக் கொண்டிருந்தது. இவ் வர்க்கச் சேர்க்கைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் முதலிய நாடுகளில் வெவ்வேறு விதமாய் இருந்தன. இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியில் முதலாளிகளும், முதலாளிகள் ஆகிவிட்ட நிலப்பிரபுக்களில் ஒரு பகுதியினரும் தலைமை ஏற்றனர். இதனுல்தான் இப் புரட்சியின் விளைவாக நிலப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவான தீர்வு ஏற்படவில்லே. முதலாளிகளும், நிலப்பிரபுக் களும் சேர்ந்து நின்று விவசாயிகளுக்கு எதிராக நிலப்பிரபுக்களுக்கு நிலவுரிமை கிடைக்கும்படி செய்தனர். விவசாயிகள் முதலாளிகளோடு சேர்ந்து புரட்சிப் போராட்டங்களின் முன்னணியில் நின்ற போதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். 19-ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் விவசாய வர்க்கம் என்ற பெயரே இல்லாமல் போயிற்று, இந் நிலைமைக்கு நேர்மாருன நிலைமை பிரெஞ்சு முதலாளித்துவ புரட்சியில் காணப்பட்டது. பிரான் 73