பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில் நிலப்பிரபுக்களில் மிகச் சில பகுதியினரே முதலாளிகளாக மாறியிருந்தனர். பெரும் பகுதி நிலப்பிரபுக்கள் விவசாயிகளை நேரடியாகவும், முதலாளிகளை மறைமுகமான வரிகளின் மூலமாகவும் க்ரண்டி வாழ்ந்தனர். பிரெஞ்சு முதலாளிகள் நிலப்பிரபுத்துவ அரசையும், நிலப்பிரபுக்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு விவசாயிகளையும், தொழிலாளிகளையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது, நிலப்பிரபுக்களோடு கொண்டிருந்த நேச உறவு களைக் கைவிட்டு அவர்கள் விவசாயிகளோடும், சிறு உற்பத்தியாளரோடும், தொழிலாளரோடும் நேச உறவை ஏற்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சு முதலாளி வர்க்கத்தினுல் தலைமை தாங்கப்பட்ட புரட்சியின் விளைவாக நிலப்பிரபுத்துவ அமைப்பு, நாட்டிலும், நகரத்திலும் முழுவதுமாக அழிக்கப் பட்டது. நிலப்பிரச்சினை விவசாயிகளுக்கு ஆதர வாகத் தீர்வு காணப்பட்டது. எப்பொழுதுமே, முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியில் உழைக் கும் மக்களோடுதான் சேர்ந்து கொள்ளும் என்று சொல்வதற்கில்லே. அது எந்த வர்க்கங்களோடு சேரும் என்பதை ஆளும் நிலப்பிரபுத்துவ வர்க்கத் தின் நிலைமையும் முதலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கங்களோடு கொண்டுள்ள உறவையும் பொறுத் தது. முதலாளி வர்க்கமும் ஒரு சுரண்டும் வர்க்கம். ஆதலால் உழைக்கும் மக்களால் தனது சொத்துரி மைக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சுவது இயற்கையே. ஜெர்மனியில் தொழிலாளி வர்க்கத் தோடும் விவசாய வர்க்கத்தோடும் கூட்டுச்சேராத காரணத்தால் பூர்ஷாவாப் புரட்சி வெற்றி பெற முடியவில்லை - முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதி பத்தியம் என்று லெனின் கூறினர். ஏகாதிபத்தியக் 74