பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால கட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் வர்க்கங் களின் உறவுகள் பெரிதும் மாறுதலடைகின்றன. பல முதலாளித்துவ நாடுகளில் நிலப்பிரபுத்துவ ஒழிப்புப் புரட்சி முற்றுப் பெறவில்லை. இப் புரட்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு-முதலாளித் துவப் புரட்சி என்று மார்க்ளியே வாதிகள் அழைக் கிரு.ர்கள். இந் நாடுகளில் தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் இப் புரட்சிக்கு உந்து சக்திகள் ஆகின்றன. தொழில்முதலாளித்துவ கால கட்டத் தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முதலாளித்துவப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கியது. ஆனால் ஏகாதிபத்தியக் கால கட்டத் தில் பல நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் நிலப் பிரபுத்துவ வர்க்கத்தோடு சேர்ந்து கொண்டது. சார்பு நாடுகளிலும், கலோனியல் அடிமை நாடுகளிலும் நிலைமை வேறுவிதமாக இருந்தது. அந் நாடுகளில் தேசீய முதலாளித்துவ வர்க்கம், நிலையான தன்மையுடையதாக இல்லாதிருந்த போதிலும் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மைகள் கொண்டதாக இருக்கிறது. எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெருத இந்தியா போன்ற ஏகபோக மல்லாத தேசீய முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயக மாற்றங்களை விரும்பும் புரட்சிகரமான சக்தியாக விளங்குகிறது. நிலப்பிரபுத்துவ ஒழிப்புப் புரட்சிகள் இரண்டு வகையானவை. ஒன்று, உச்சத்திலிருந்து செயல் படும் முதலாளித்துவப் புரட்சி. இரண்டு, உழைக் கும் மக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் முதலா ளித்துவ ஜனநாயகப் புரட்சி. மக்கள் திரளாக செயல்படுவதால் இதை மக்கள் புரட்சி என்றும் கூறலாம். மேற்கூறிய் முதல் வகையான புரட்சியில் விவசாயிகளும், தொழிலாளிகளும் பங்கு கொள்ளாம 75