பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேயே முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவ எதிர்புரட்சியில் வெற்றி பெறுகிறது. இரண்டாவது வகைப் புரட்சியில் தொழிலாளிகளும், விவசாயி களும் ப்ங்கு கொண்டு புரட்சியின் விளைவுகளை வெளிப்படுத்துகிரு.ர்கள். லெனின் தம்முடைய 'அரசும் புரட்சியும்’ என்ற நூலில், இவ்விரு வகை புரட்சிகளுக்கு உதாரணங்கள் காட்டுகிருர், முதல் வகைப் புரட்சிக்கு உதாரணங்களாக, 1908-ல் நடை பெற்ற (துருக்கியப் புரட்சியையும், 1910-ல் நடை பெற்ற போர்த்துக்கீசிய புரட்சியையும் உதாரணங் களாகக் கூறுகிருர். 1995-ல் நடைபெற்ற ருஷ்யப் புரட்சியை மக்கள் புரட்சககு உதாரணமாக காட்டுகிார்). துருக்கியப் புரட்சியிலும், போர்த் துக்கீசியப் புரட்சியிலும் மக்கள் பங்குகொண்ட போதிலும் பெருந்திரளாக பங்கு கொள்ளாத தினுல் புரட்சியின் போக்கின்மீது தங்கள் வர்க் ..مما கங்களின் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகளில் வெற்றி பெறும்போது, நிலப்பிரபுத்துவ அரசாங்கக் கரு வியை முற்றிலும் அழித்து விடுவதில்லை. அதுவே ஒரு சுரண்டும் வர்க்கமாதலால், வர்க்கச் சுரண்டலை அது ஒழிப்பதில்லை. நிலப்பிரபுத்துவ அரசாங்கக் கரு வியை முதலாளித்துவ வர்க்கம் கைப்பற்றிக் கொண்டு, தன்னுடைய சுரண்டல் தேவைகளுக் கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுகிறது. இப்படி மாற்றியமைக்கிறபோது அது வெற்றி பெற்றது, முதலாளித்துவ புரட்சியின் மூலமா அல்லது மக்கள் புரட்சியின் மூலமா என்பதைப் பொறுத்து அர சாங்க அமைப்பில், ஜனநாயக அம்சங்கள் காணப் படும். மக்கள் மிகுதியாகப் பங்கு கொண்ட புரட்சி யின்மூலம் முதலாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வந் திருக்குமானுல் நிலப்பிரபுத்துவ அரசாங்கம் உடைத் தெறியப்படும். - 76