பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதிலும் அவ்வுற்பத்தி முறை அழிக்கப்பட்ட பின்னர்தாம் சோஷலிச அமைப்புமுறை தோன்று கிறது. பூர்ஷாவாப் புரட்சி ஏற்கனவே வளர்ந்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப்பிரதான உற்பத்தி முறையாக ஆக்குவதே நோக்கமாகும். ஆனுல் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அதிகாரத் தைக் கைப்பற்றிய பின்னர்தாம் புதிய சோஷலிச உற்பத்தி முறை நிறுவப்பட வேண்டும். முதலாளித் துவ உற்பத்தி சாதனங்களே சமூக உற்பத்தி சாதனங் களாக மாற்றுவதற்கு ஒரு அரசியல் புரட்சியின் மூலம் முதலாளித்துவ வர்க்க அதிகாரத்தை ஒழித்து. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம். அவ்வதிகாரத்தை பயன்படுத்தித்தான் உறபத்தி சாதனங்களின் சமூக உடைமையையும். கூட்டுடைமையையும் நிறுவுதல் வேண்டும். இந்த மாறுதல் நடைபெற நீண்டகால வர்க்கப் போராட் டம் நிகழ வேண்டியது அவசியமாகும். இக்கால கட் டம் முழுவதும் சோஷலிசப் புரட்சிக் கால கட்ட மாகும். இக்கால கட்டத்தில் அரசியல், பொருளா தார, பண்பாட்டு வாழ்க்கை முழுமையாக மாற்றியமைக்கப்படுகிறது. முதலாளித்துவத்திலி ருந்து சோஷலிசத்திற்கு மாறுகின்ற புரட்சிகரமான மாற்றம், படிப்படியான பரிணும மாற்றத்தால் ஏற்பட முடியாது. 20-ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் முதலாளித் துவ அமைப்பு ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற் றது. முற்போக்கு சக்திகள், ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டன. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சில புரட்சிகர மான இயக்கங்களிலிருந்து சோஷலிஸ்ப் புரட்சி தோன்றக்கூடும். முதலாளித்துவப் பாதையில் சிறிது 79.