பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சி வரலாற்றில் நடைபெற்றுள்ள பல வகைப் புரட்சிகளினின்றும் பாட்டாளி வர்க்க சமுதாயப் புரட்சி, பல அடிப்புடையான அம்சங்களில் வேறு படுகிறது. அக்டோபர் சோஷலிசப் புரட்சி அதற்கு முன்னர் நடைபெற்றுள்ள பூர்ஷாவா புரட்சிகளி விருந்து அடிப்படையாக வேறுபட்டது. முந்தைய புரட்சிகளில் உழைக்கும் மக்கள் வெற்றி பெற்ருலும் அந்த வெற்றியைப் புதிய சுரண்டல்காரர்கள் பறித்துக் கொண்டு விட்டார்கள். பழைய நிலப்பிர புத்துவ சுரண்டல்காரர்களுக்குப் பதில் புதிய முதலாளித்துவ சுரண்டல்காரர்கள் உழைக்கும் மக்களின் எஜமானர்களானர்கள். முந்தை புரட்சி கள் ஒரு வகையான சுரண்டலையும், சுரண்டல் ஆட்சியையும் ஒழித்துவிட்டு அதற்குப் பதிலாக மற்ருெரு வகை சுரண்டலையும் சுரண்டல் ஆட்சியை யுமே ஸ்தாபித்தன. ஆளுல் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சியான அக்டோபர் புரட்சி எல்லா வகையான சுரண்டலையும் ஒழித்து விட்டது. சோஷ விசப் புரட்சிக்கும் முதல்ாளித்துவப் புரட்சிக்கும் மற்ருெரு முக்கியமான வேறுபாடு உள்ளது. நிலப் பிரபுத்துவ சமுதாயத்திற்குள்ளேயே முதலாளித்துவ உற்பத்தி ஒரு விரோதமான உற்பத்தி முறையாகத் தோன்றி விடுகிறது. அதற்குள்ளேயே இவ்விரண்டு உற்பத்தி முறைகளுக்கும் முரண்பாடு தோன்றி, தலாளித்துவ உற்பத்தி முறை வளருகிறது. ஆனுல் சோஷலிச உற்பத்தி முறை தனக்கு முந்திய உற்பத்தி முறையான முதலாளித்துவ உற்பத்தி முறையோடு சேர்ந்து முதலாளித் துவ சமுதாய, இ. லேயே தோன்றுவதில்லை. சேர்ஷலிச உற்பத்தி முறைக்குத் தேவையான இயந்திர உற்பத்தியும் உற்பத்தி சக்திகளின் சமுதாயத் தன்மையும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தோன்றிவிட்ட .* ५ 78