பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்ளிய சமூகவியல் கொள்கை மார்க்ளிய தத்துவத்தின் மூன்று உட்கூறுகள் மார்க்ஸியம் என்பது உலக தொழிலாளர் வர்க்கத்தின் பிரபஞ்சக் கண்ணுேட்டமாகும். இது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் தோன்றி வளர்ச்சி பெற்றது. தொழி லாளர் வர்க்கம் புரட்சிகரமான வர்க்கம் ஆனதால் அதன் படைப்பான தத்துவம் புரட்சிகரமான தத்துவமாய் உள்ளது. இதன் பொருள் என்ன? மார்க்ஸ் இந்தக் கேள்விக்கு விடை கூறுகிருர்: உலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பற்பல தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவை பிரபஞ் சத்தை விளக்குகின்றன. ஆனல் இன்றைய கேள்வி பிரபஞ்சத்தை எப்படி மாற்றுவது என்பதேயாம்.' இந்தக் கேள்விக்கு, மார்க்ளியத்திற்கு முந்திய எந்தத் தத்துவமும், விடைகூற முடியவில்லை. அவை இருப்பையும், உணர்வையும் ஆராய்ந்து அவ்விரண் டின் உறவுகளே விளக்க முயன்றன. ஆனல் மார்க் வீயம் இவ்விரண்டின் தோற்றம், வளர்ச்சிக்குரிய உந்து சக்தி, வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள், ago—Being, 2-&rtaj—Consciousness மா. கெச-2